தியாகச் செம்மல் நால்வர் (நூல்)

தியாகச் செம்மல் நால்வர்
நூல் பெயர்:தியாகச் செம்மல் நால்வர்
ஆசிரியர்(கள்):நெ. து. சுந்தரவடிவேலு
வகை:சிறுவர் இலக்கியம் - கட்டுரை
துறை:வாழ்க்கை வரலாறு
காலம்:20ஆம் நூற்றாண்டின்
இறுதிப் பத்தாண்டுகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:40
பதிப்பகர்:தாமரை
106 சிதம்பரனார் சாலை
ஆழ்வார் திருநகர்
சென்னை 600 087
பதிப்பு:முதல் பதிப்பு: 1992

தியாகச் செம்மல் நால்வர் [1] என்னும் நூல் மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும் கல்வியாளருமான நெ. து. சுந்தரவடிவேலு என்பவரால் அவரது 80 ஆம் அகவையில் எழுதப்பட்ட நூல் ஆகும். வரலாற்றில் வாழ்ந்து சாதனை புரிந்தவர்களைப் பற்றி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் நெ. து. சு. இந்நூலை எழுதியதாகக் கூறுகிறது இந்நூலின் முன்னுரை.

மகாத்மா காந்தி

குசராத்து மாநிலத்தில் பிறந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும் இந்தியாவில் விடுதலைக்காகவும் இன்னாசெய்யாமை முறையில் போராடி மகாத்மா காந்தியாக மறைந்த வரலாற்றை இக்கட்டுரை இயம்புகிறது.

ஆல்பர்ட் சுவைட்சர்

செருமனியில் பிறந்த ஆல்பர்ட் சுவைட்சர் மருத்துவராக மாறி ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் மருத்துவத் தொண்டாற்றி திருக்குறளின் சுவைஞராக உருவான வரலாற்றை இயம்பும் கட்டுரை இது.

ஆபிரகாம் லிங்கன்

ஓராண்டே பள்ளியில் படித்த ஆபிரகாம் லிங்கன் தானே முயன்று கற்று நாவலராக, அஞ்சல் அதிகாரியாக வாழ்ந்து அமெரிக்க நாட்டின் அதிபராக உயர்ந்து, அடிமை முறையை ஒழித்து மறைந்த ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை அறிமுகம் செய்யும் கட்டுரை இது.

ரூசோ

சுவிட்சர்லாந்தின் செனீவா நகரில் பிறந்த ரூசோ புரட்சிகனல் ததும்பும் எழுத்தாளராக மலர்ந்து, மறைந்த வரலாற்றை இயம்பும் கட்டுரை இது.

அடிக்குறிப்பு

  1. நூலில் தியாகசெம்மல் நால்வர் என ஒற்றுப்பிழையோடு முகப்புத்தாள் அச்சிடப்பட்டு உள்ளது
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya