திருநந்திக்கரை நந்தீசுவரர் கோயில்
நந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் திருநந்திக்கரை புறநகர்ப் பகுதியில், நந்தியாறு கரையோரப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற 12 சிவன் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். இக்கோயிலின் கருவறை மண்டபம் வட்ட வடிவில் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் நந்தீசுவரர் ஆவார். சிவபெருமான் பார்வதியுடன், விநாயகரை மடியில் அமர்த்தியவாறு அருள்புரிகிறார். விஷ்ணு, விநாயகர், சாஸ்தா, நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் நந்தியாறு ஆகும்.[2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நந்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°23′52″N 77°17′50″E / 8.3978°N 77.2973°E ஆகும். இக்கோயிலில் நட்சத்திர மண்டபம் ஒன்று உள்ளது. அசுபதி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், 27 கண துவாரங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.[3] ஓர் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில், இம்மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் நிறுவப்பட்டு, அவற்றில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.[4] சிவபெருமானே பிரதிட்டை செய்ததாகக் கருதப்படும் நந்திக்கு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia