திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1952 (1952 Travancore-Cochin Legislative Assembly election) என்பது இந்திய மாநிலமான திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்காக நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் 1952 மார்ச் 27 அன்று நடைபெற்றன.
தொகுதிகள்
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம் 97 தொகுதிகளைக் கொண்டிருந்தது. இவற்றில் 11 இரண்டு உறுப்பினர் தொகுதிகளாகவும் 86 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகும். ஒற்றை உறுப்பினர் தொகுதிகளில் 33,65,955 வாக்காளர்களும், இரண்டு உறுப்பினர் தொகுதிகளில் 8,44,389 வாக்காளர்களும் இருந்தனர். இத்தேர்தலில் 97 தொகுதிகளில் இருந்த 108 இடங்களுக்கு 437 பேர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள்
மூன்று தேசிய கட்சிகளுடன் (இந்திய தேசிய காங்கிரசு, புரட்சிகர சோசலிசக் கட்சி,சோசலிச கட்சியுடன் நான்கு மாநிலக் கட்சிகளும் (கொச்சி கட்சி, திருவாங்கூர் கொச்சி குடியரசு பிரஜா கட்சி, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி) மற்றும் இரண்டு பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் (கேரள சோசலிச கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னணி) சட்டமன்ற தேர்தல்களில் பங்கேற்றன. திருவாங்கூர் கொச்சி மாநிலத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டதால், இதன் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தல் நடைமுறையில் பங்கேற்றனர். பின்னர் தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இடதுசாரிகளின் ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கினர்.[1][2]
முடிவுகள்
காங்கிரசு கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்தது. எனவே இந்திய தேசிய காங்கிரசு, தமிழ்நாடு காங்கிரசு, கேரள சோசலிச கட்சி, நியமன உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.