தூதுவளை
தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. விளக்கம்இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு.[1] தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. மூலிகை தயார் செய்யும் முறைதூதுவளை பறித்து நிழலின் கீழ் இலைகளை உலர்த்தி பின்னர் முள்களை நீக்க வேண்டும். ஏனெனில் முள் உள்ள செடிகளில் சற்று நச்சுத்தன்மையுள்ளதாக கருதப்படுவதால் சமையல் செய்வதற்கு முன்பே இந்த முள்ளை நீக்க வேண்டியது அவசியம். பின்னர் எண்ணெய் அல்லது நெயில் சிறிது வறுக்கவும், பின்னர் அதை அரைத்து சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட சளி, காய்ச்சல் மற்றும் பொதுவான குளிர் சிகிச்சை செய்வதற்குப் பயன்படுகிறது.[சான்று தேவை] சேமித்து வைக்கும் முறைஇந்த மூலிகை நிழலின் கீழ் இலைகளை உலர்த்தியதன் மூலம் தூள் வடிவத்தில் சேமிக்கப்படலாம்.[சான்று தேவை] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia