தென்மேற்கு சீனா
![]() தென்மேற்கு சீனா (Southwestern China, சீனம்: 西南; பின்யின்: Xīnán) என்பது சீனாவின் தென்பகுதி நிலங்களைக் குறிக்கிறது. இப்பகுதியான் மேற்குப்புறத்தில் கடலோர மலைகள் (东南丘陵) சூழ்ந்து உள்ளன. மறுபுறம் திபெத்திய பீடபூமி உள்ளது. இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளால் கரடுமுரடாகவும், வேறுபட்டும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்நிலத்தின் கிழக்குப்புறம் சுண்ணாம்புக் கரடாலான யுன்னான்-குய்சோ உயர்நிலம் உள்ளது. இந்நிலத்தின் பெரும்பகுதி யாங்சி ஆறு ஓடி, மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளை, இதன் வடகிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது.[3] இப்பகுதிகளில் சிலவற்றை 230 பொது ஊழி காலத்தில் சின் அரசமரபு பேரரசர் சின் சி ஹுவாங் இணைத்துக் கொண்டார்.[4] இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளில் வாழும் மக்களிடையேயும், வேறுபடும் தனித்துவ சமூக பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன.[5] 1970 பிறகு இங்குள்ள கிராம மக்களிடம் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், சீன நாட்டின் சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் 50% வாழ்கின்றனர்.[5] இப்பகுதி மக்கள் தனித்துவமான தென்மேற்குமாண்டரின் மொழி என்பதைப் பேசுகின்றனர்.[6] இவற்றையும் காணவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia