தெமின்க் கொசு உள்ளான்
தெம்மிங்க் கொசு உள்ளான் (Calidris temminckii) ஒரு சிறைய நீர்ப் பறவை ஆகும். பறவையின் பொதுப்பெயரும் இலத்தீன இருசொற் பெயரீடும் டச்சு இயற்கையியலாளரான கோன்றாடு ஜேக்கப் தெம்மிங்கின் நினைவாக வழங்குபவை ஆகும். சில சாம்பல் நிற நீர்ப் பரவைகளுக்கு அரிசுட்டாட்டில் இட்ட பெயரான காலிடிரிசு(kalidris) அல்லது சுகாலிடிரிசு(skalidris) பேரினப் பெயராக விளங்குகிறது.[3] இது மஞ்சக்கால் கொசு உள்ளான் எனவும் அழைக்கப்படுகிறது[4]. உடலமைப்பும் தோற்றமும்இவற்றின் நீளம் 13.5-15 செ.மீ. ஏறக்குறைய இதே அளவு உள்ள கொசு உள்ளானை (கேலிடிரிசு மினுசா) விட குறுகிய கால்களையும் சற்று நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. தெமின்க் உள்ளானின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புற வால் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்; மாறாக கொசு உள்ளானின் கால்கள் கருத்தும் வெளிப்புற வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இதன் குரல் உரத்த கிறீச் குரலாகும். காட்சிமேடை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia