தேசாந்திரித் தட்டான்
தேசாந்திரித் தட்டான் (Pantala flavescens) என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்த, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] இது மிகவும் பரவலாகக் காணப்படும் தட்டாம்பூச்சி ஆகும்.[2] தேசாந்திரித் தட்டான்கள் வலசை போகும் பண்பு கொண்டவை. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று அலைகளின் உதவிகொண்டு, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு என்று இந்த வகைத் தட்டான்கள் வலசைச் சுழற்சியைப் பின்பற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சார்லஸ் ஆண்டர்சன் என்னும் கடலுயிர் ஆராய்ச்சியாளர். நான்கு தலைமுறைத் தட்டான்கள், மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன என்கிறார் ஆண்டர்சன்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia