தேசியத் தலைநகர் தில்லி அரசு (திருத்தச்) சட்டம், 2021தேசியத் தலைநகர் தில்லி அரசு (திருத்தச்) சட்டம், 2021 (Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2021 or the GNCTD Amendment Act)[1]இந்திய அரசு இத்திருத்தத் சட்டத்தை 28 மார்ச் 2021 அன்று இயற்றியது.[2] 1991-ஆம் ஆண்டின் தேசியத் தலைநகர் தில்லி அரசுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால், இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தில்லி அரசு மேற்கொள்ளும் ஏதேனும் நிர்வாக செயல்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநரின் கருத்து கேட்டறிய வேண்டும்.[3] விளக்கம்2021-ஆண்டின் தேசியத் தலைநகர் தில்லி அரசு (திருத்தம்) சட்டப்படி , இனி தில்லி அரசு சட்டமன்றத்தால் செய்யப்பட்ட எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள தில்லி அரசு என்ற சொல் தில்லி துணை ஆளுநரை மட்டுமே குறிக்கும். இச்சட்டத்திருத்தமானது சட்டசபையின் நடைமுறை மற்றும் அன்றாட அலுவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்க சட்டமன்றத்தை அனுமதிக்கிறது. அத்தகைய விதிகள் மக்களவையில் நடைமுறை மற்றும் அன்றாட நடத்தை விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும் எனச்சட்ட திருத்தம் கூறுகிறது. சட்டமன்றம் தன்னையோ அல்லது அதன் குழுக்களையோ இயக்கும் வகையில் கீழ் கண்ட சட்டங்கள் இயற்றுவது இந்த சட்ட திருத்தம் தடை செய்கிறது: (i) தில்லி தேசியத் தலைநகர் வளய நிர்வாகத்தின் விஷயங்களை கருத்தில் கொள்ளவும் மற்றும் (ii) நிர்வாக முடிவுகள் தொடர்பாக எந்த விசாரணையையும் நடத்தவும். மேலும், இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன் செய்யப்பட்ட அனைத்து விதிகளும் செல்லாது. தில்லி சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பார்வைக்கு வைக்க வேண்டும்.[4][5][6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia