தேனீப்போலி நுதலி
தேனீப்போலி நுதலி என்பது ஓஃபிரிசு ஏப்பிஃபெரா (Ophrys apifera) என்ற அறிவியற் பெயர் கொண்ட பல்லாண்டு வாழும் ஒரு பூச்செடியாகும். உருவமைப்புதேனீப்போலி நுதலி 15 முதல் 50 செ.மீ. உயரம்வரை வளரக்கூடியது. வறட்சி தாங்கக்கூடிய இச்செடி கூதிர்காலத்தில் கொழுந்து விட்டு குளிர்காலத்தில் மெள்ள வளரும். அடியிலைகள் முட்டைவடிவிலும் சாய்ந்த ஈட்டிவடிவிலும் மேலிலைகளும் பூவடியிலைகளும் முட்டை-ஈட்டிவடிவிலும் இருக்கின்றன. ஏப்பிரல் முதல் சூலை மாதம்வரை பன்னிரண்டு பூக்கள்வரை பூக்கும். மலர்கள் பெரிய புல்லியிதழ்களையும், நடுவில் பச்சைத்தண்டும் கொண்டிருக்கின்றன. சிற்றுதட்டுப்பகுதி மும்மடல் கொண்டிருக்கும். அவற்றின் அமைப்பு தேனீக்களைப்போலவே இருக்கிறது. இதன் தேனீயைப் போன்ற தோற்றத்தால் இப்பெயர்பெற்றது. இனப்பெருக்கம்இந்த தேனீப்போலிப்பேரினத்தைச்சேர்ந்த சிற்றினங்களில் இவைமட்டுமே தன்மகரந்தச்சேர்க்கைமூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. நடுத்தரைக்கடலருகே சில பகுதிகளில் இருக்கும் மற்ற இனங்கள் சிலவகை தேனீக்களை ஈர்த்து அவற்றின்வழியாக இனப்பெருக்கம் ஏற்படுகிறது. ஆண் ஈக்கள் இம்மலர்களை பெண்ணீக்கள் என்றெண்ணி உறவுகொள்ள முயலும்போது மகரந்தத்தூள் அப்பிக்கொண்டு ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதை பொய்க்கலவி என்பர்.[1] கலாச்சாரம்தேனீப்போலி நுதலி என்பது பெட்போர்ட்ஷியரின் கலாச்சார மலராகும்.[2] குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia