தைஜார்ஜ் நோய்த்தொகை(DiGeorge syndrome), அல்லது 22q11.2 நீக்க நோய்த்தொகை(22q11.2 deletion syndrome என்பது குறுமவகம் 22 இன் சிறுபகுதி நீக்கத்தால் ஏற்படும் நோய்த்தொகை ஆகும்.[7] அறிகுறிகள் மாறியல்புள்ளனவாக அமைகின்றன; இவற்றில் பிறவி இதயச் சிக்கல்கள், குறிப்பிட்ட முகக் கூறுபாடுகள், அடிக்கடி ஏற்படும் தொற்றுகள், வளர்ச்சி வேகக் குறைவு, கற்றல் சிக்கல்கள், பிளவண்ணம் ஆகியன அடங்கும்.[7] உடன் சிறுநீரகச் சிக்கல்கள், கேள்வித் திறனிழப்பு, தன் நோய் எதிர்ப்புத்திறக் கோளாறுகள் (முடக்குவாத மூட்டழற்சி) அல்லது கிரேவ்சு நோய் போன்றன).[7]
தைஜார்ஜ் நோய்த்தொகை குறுமவகம் 22 இல் 30 முதல் 40 வரையிலான மரபன்கள் 22q11.2 இருப்பில் நீக்கப்படுவதால் ஏற்படுகிறது.[3] ஏறத்தாழ 90% நேர்வுகளில் இது குழந்தையின் தொடக்கநிலை வளர்ச்சியின்போது ஏற்படும் புதிய சடுதிமாற்றத்தலும் எஞ்சிய 10% பெற்றோரிடம் இருந்து மரபாகவும் கையளிக்கப்படுகிறது.[7] இது உடலக் குறுமவக ஓங்கல் வகையாகும். அதாவது இந்நிலை ஒரேயொரு தாக்கமுற்ற குறுமவகமே உருவாக்கிவிடும்.[7] அறிகுறிகள் வழியாக இது முதல் அறியப்பட்டு, மரபியல் ஓர்வுகளால் உறுதி செய்யப்படும்.[5]
மேற்கோள்கள்
↑Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. ISBN1-4160-2999-0.