தொகைச்சொல்

தொகை என்னும் சொல்லுக்கு குறிப்பிட்ட வகையினத்தைச் சுட்டும் பொதுச் சொல்லாகும். ஒரே வகையின் கீழ் அடங்கும் வரையறுக்கப்பட்ட சில சொற்களின் பொதுப்பெயர் தொகைச் சொல் எனப்படும்.

சில தொகைச்சொற்கள் பின்வருமாறு:

தொகை விரி
இருவினை நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
இருதிணை உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை
முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
முப்பால் அறம், பொருள், இன்பம்
மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை
மூவேந்தர் சேரன், சோழன், பாண்டியன்
நாற்றிசை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
நானிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐம்பால் ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்
முக்கொடி வில் அம்பு, மீன், புலி
நான்மறை இரிக், யசூர், சாம, அதர்வண
ஐம்பொறி மெய், வாய், மூக்கு, கண், செவி

ஆதாரம்

  1. தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு சமச்சீர்க் கல்வி தமிழ்ப் பாடநூல். பக்க எண்: 52
  2. தமிழ் இணையக் கல்விக் கழக பக்கச் செய்தி (தொல்காப்பியம்)
  3. தமிழ்மொழி.வலை வலைப்பூ பக்கம் (வெளி இணைப்பு) பரணிடப்பட்டது 2017-06-23 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya