தொலைதூரக் கல்விக் குழுமம் (டிஇபி) என்பது இந்திரா காந்தி தேசியத் திறந்தவெளி பல்கலைக்கழகச் சட்டத்தின்(1985) கீழ், புது தில்லியில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, இந்திய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், நெடுந்தொலைவுக் கல்விமுறை போன்றவற்றை மேம்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் ஆகும். மேலும் அதன் செந்தரங்களை வரையறுக்கும் பொறுப்பும் இதனிடம் உள்ளது.[1][2] இது முந்தைய திறந்தநிலை பயிவுக்கும் திறந்தநிலைக் கல்விக்கும் பொருப்பு வகித்த நெடுந்தொலைவுக் கல்வி மன்றத்துக்குப் (டிஇசி) பதிலாக 2012 இல் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் திறந்த வெளி பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி முறைகளை நாட்டிலுள்ள கல்வி முறையின் மேம்பாட்டிற்காகவும் கற்பித்தல், மதிப்பீடு. ஆராய்ச்சி போன்றவற்றின் செந்தரங்களை வரையறுக்கவும், ஒருங்கிணைக்கவும் தொலைதூர கல்விக் குழுமம் தகுதி வாய்ந்ததாக இருப்பதால் பல்கலைக்கழகம் சரியான நடவடிக்கைகள் மூலம் கடமையாற்றுவதற்கு இது துணைப் புரிகிறது. இத்தகைய அமைப்புகளில்; பல்கலைக் கழகத்தின் அண்மைய அறிவியல் அறிவையும் புதிய கல்வி தொழில்நுட்பத்தையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் வழியாகவும், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பும் அதிக நெகிழ்வுத்தன்மையும், பன்முகத்தன்மையும், எளிதில் அணுகுத்தக்க தன்மையும், எளிதில் நகரும் தன்மையும் கண்டுபிடிப்புகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஊக்குவிக்கும் வகையிலும் இது பணிபுரிகிறது. பல்கலைக்கழகச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தின் தொலைதூர கல்வி மன்றம் ஒன்றை நிறுவ வேண்டியது தேவையும் கட்டாயமும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.[3][4][5] இந்தியாவில் தொலைதூர கல்வி மன்றம் (டிஇசி) என்பது நாட்டின் திறந்த, தொலைதூர கற்றல் அமைப்பின் உயா்ந்த அமைப்பாகும். இது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழக 28 வது சட்டத்தின்கீழ், திறந்த பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்விமுறை அமைப்பின் உச்சநீதி மன்றமாக செயல்படுவதற்கு இது அதிகாரம் அளிக்கிறது. திறந்த பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்விமுறை அமைப்பின் தரநிலைகளின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு இது பொறுப்பாகும். இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் துணை அதிபர் தொலைதூரக் கல்வி மன்றத்தின் முற்றதிகாரம் வாய்ந்த அதிகாரியாவார்.[6]
ஜூன் 2013, பல்கலைக்கழக நல்கைக் குழு தொலைதூரக் கல்வி மன்றத்தைத எடுத்துக் கொண்டது. இந்தியாவில் தொலைதூர கல்வித் திட்டங்களை மேலாளும் பொறுப்பை தொலைநோக்கு கல்விப் பணியகத்தை நிறுவி அதன்வழி செயல்படுத்தியது. ப.ந.ஆ நிறுவனங்களுக்கு நிரல் வாரியாக ஒப்புதல் பெறும் முன்மொழிவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்