தொழில்துறை நடவடிக்கைதொழில்துறை நடவடிக்கை (Industrial action-ஐரோப்பா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா) அல்லது பணி நடவடிக்கை (job action-கனடா மற்றும் அமெரிக்கா) எனப்படுவது, தொழிலாளர்களின் அதிருப்தியைக் காட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கையாகும். மோசமான பணி நிலை, குறைவான ஊதியம், போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல், தொழிலாளர் கோரிக்கைகளுக்கு முதலாளிகளைப் பணியவைக்கும்வகையில் உற்பத்தியளவைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும். 'வேலை நிறுத்தம்', 'மந்தமாக வேலைசெய்தல்', 'விதிப்படி வேலைசெய்தல்' ஆகியவை தொழில் நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.[1][2][3] இது, தொழிற்சங்கங்களால் கூட்டாக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன், பணப்பலன் ஆகியவை குறித்த அவர்களது அக்கறையை வெளிப்படுத்தும் வழிகளாக இந்நடவடிக்கைகள் அமைகின்றன. சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்கள் ஒப்பந்த பணியாட்களை ஏதும் பெரிய காரணம் இன்றி வேலையை விட்டு நிறுத்தும் வழக்கம் பரவலான ஒன்று. இவ்வாறு ஒப்பந்த முறிவு ஏற்பட்டு அதற்கு ஒரு தீர்வு எட்ட முடியாத பட்சத்தில், தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை பதியும் முகமாக பல போராட்டங்களை முன்னெடுக்கும். பெரிய அளவிலான வேலைநிறுத்தம் பொதுவாக செய்யப்படும் ஒன்று. அதோடு உள்ளிருப்பு போராட்டம், வேலையின் வேகத்தை குறைத்தல், ஆர்ப்பாட்டங்கள், முதலிய பல போராட்ட வடிவங்களை தொழிற்சங்கங்கள் கையிலெடுக்கும். இந்த போராட்டங்கள், ஒரு இடக்கரடக்கலாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் அல்லது தொழில்துறை நடவடிக்கை என்று அழைக்கப்படுவதுண்டு. ஆனால், தொழிலாளர் விவகாரங்களுக்காக மட்டுமல்லாது அரசியல், சமுதாய மாற்றங்களுக்காகவும் இவை அமையலாம். வகைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia