தொழில்நுட்பத் துணிபுவாதம்(Technological determinism) என்பது சமூகத்தின் தொழில்நுட்பமே அதன் கட்டமைப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் முடிவுசெய்கிறது எனத் துணியும் எண்ணப் போக்காகும். இதுவொரு குறைப்புவாத எண்னப் போக்காகும். இது அமெரிக்கச் சமுகவியலாளரும் பொருளியலாளருமான தோர்சுட்டீன் வெபுளன் (1857–1929) தொடங்கிவைத்த எண்னப் போக்காகும். 20 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்காவின் முணைப்பான தொழில்நுட்பத் துணிபுவாதியாக தோர்சுட்டீன் வெபுளனின் பின்னோடியான கிளாரன்சு அய்ரெசுவையும் ஜான் தெவேவையும் கூறலாம். வில்லியம் ஓகுபர்னும் முனைப்பு வாய்ந்த தொழில்நுட்பத் துணிபுவாத்த்துக்குப் பெயர்பெற்றவர் ஆவார்.
சமூக பொருளியல் வளர்ச்சிக்கான தொழில்நுட்பத் துணிபுவாதம் முதலில் செருமானிய மெய்யியலாளரும் பொருளியலாளரும் ஆகிய கார்ல் மார்க்சால் விரிவாக விளக்கப்பட்டது. இவர் தொழில்நுட்ப மாற்றங்கள் குறிப்பாக பொருளாக்க விசைகள், மாந்த, சமூக உறவுகளிலும் சமூக்க் கட்டமைப்பிலும் முதன்மை வாய்ந்த தாக்கத்தைச் செலுத்துகின்றன எனவும் எனவே, சமூக உறவுகளும் பண்பாட்டு நடைமுறைகளும் அறுதியாக சமூகத்தின் தொழில்நுட்ப, பொருளியல் அடித்தளத்தைச் சார்ந்து உருவாகின்றன எனவும் வாதிட்டு விளக்கினார். இவரது நிலைப்பாடு தற்காலச் சமுகத்தில் பொதிந்துள்ளது. தற்காலச் சமூகத்தின் விரைந்து மாறும் தொழில்நுட்பம் மாந்த வாழ்க்கையைப் பெரிதும் மாற்றுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.[1]
மார்க்சின் கண்ணோட்டப்படி மாந்தச் சமூக வரலறு தொழில்நுட்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டாலும், அனைத்து மார்க்சியர்களும் தொழில்நுட்பத் துணிபுவாதிகள் அல்லர். சில மார்க்சியர்கள் மார்க்சு இந்த அளவுக்கு துணிபுவாதியல்லர் என மறுத்துக் கூறுகின்றனர். மேலும் தொழில்நுட்பத் துணிவு வாதத்தில் பல வடிவங்கள் அமைகின்றன.[2]
தோற்றம்
இந்தச் சொல் அமெரிக்கச் சமூகவியலாளரான தோர்சுட்டீன் வெபுளனால் (1857–1929) உருவாக்கப்பட்டது. வெபுளனின் சமகால வரலாற்றியலாளராகிய சார்லசு ஏ, பியர்டு இந்த துணிபுவாத படிமத்தை தன் விவரிப்புவழி உருவாக்கினார். அவர் கூறுகிறார், "தொழில்நுட்பம் தன் இஅரக்கமற்ர காலணியோடு ஒருபுரட்சியின் வெற்றியோடு அடுத்த வெற்றி நோக்கி, பழைய தொழிலகங்களையும் தொழில்துறைகளையும் நொறுக்கியபடி, புதிய செயல்முறைகளை மின்னல் வேகத்தில் எழுச்சி காணவைத்துஅணிநடை போடுகிறது."[3] இந்த விவரிப்பு தன்னளவில் அதிகாரமற்ற எந்திரங்களுக்குத் தனி அதிகாரம் வழங்கும் பொருளைத் தருவதுபோல அமைகிறது.[4] வெபுளன் இதைவைத்து, இந்த விவரிப்பு " எந்திரம் மாந்தவடிவ எண்ண நடத்தையைக் கொண்டது போல அமைகிறது" என உறுதிபடுத்துகிறார்[5] மேலும், இங்கு இந்தியாவில் தொடர்வண்டிக்காக கட்டியெழுப்ப்ப்படும் தண்டவாளத்தொடர் சாதியமைப்பைத் தகர்த்துவிடும் என எதிர்பார்த்த்தையும் நினைவுகொள்ள வேண்டும்.[1] இராபர்ட் எய்ல்புரோனர் கூற்றுப்படி, இந்தப் பொது எண்ணக்கரு கூறுவது என்னவென்றால், தொழில்நுட்பம் தன் எந்திரங்கள் வழியாக மாந்த நிலவுகையின் பொருள்வள நிலைமைகளை மாற்றி அதன்வழி வரலாற்ரையும் மாற்றுகிறது என்பதே ஆகும்.[6]
மிக முனைப்பான தொழில்நுட்பத் துணிபுவாதிகளில் ஒருவராக 20 ஆம் நூற்றாண்டில் வெபுளன் கோட்பாட்டைப் பின்பற்றும் கிளியறன்சு எடுவின் அய்ரெசு விளங்குகிறார். இவர் பொருளியல் மேய்யியல்களைத் தோற்றுவித்தமைக்காகப் பெயர்பெற்றவர். என்றாலும் இவரும் தொழில்நுட்பத் துணிபுவாதக் கோட்பாட்டை உருவாக்கிய வெபுளனுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் அடிக்கடி மரபுவழிக் கட்டமைபுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையில் நிலவும் போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். இவரது கோட்பாடுகளில் மிகவும் அறியப்பட்ட கருத்துப்படிமம் "தொழில்நுட்ப இழுப்பு" என்பதாகும் இதி இவர் தொழில்நுட்பத்தை ஒரு தன்னாக்கச் செயல்முறையாகவும் நிறுவனமாகவும் விவரிக்கிறார். இந்த கருதுபாடு தொழில்நுட்ப மீத்துணிபுவாத்த்தை உருவாக்குகிறது.[7]
விளக்கம்
தொழில்நுட்ப துணிபுவாதம் தொழில்நுட்ப வளர்ச்சிகள், ஊடகம், அல்லது ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் வரலாற்றையும் சமூக மாற்றத்தையும் இயக்கும் முதன்மை இயக்கியாக்க் கொள்கிறது.[8]
அடிக்குறிப்புகள்
[as cited in Croteau, D. and Hoynes, M. (2003) Media Society: Industries, Images and Audiences (third edition), Pine Forge Press, Thousand Oaks pp. 305–306]
மேற்கோள்கள்
↑ 1.01.1Smith & Marx, Merrit Roe & Leo (June 1994). Does Technology Drive History? The Dilemma of Technological Determinism. The MIT Press. ISBN978-0262691673.
↑Bimber, Bruce (May 1990). "Karl Marx and the Three Faces of Technological Determinism". Social Studies of Science20 (2): 333–351. doi:10.1177/030631290020002006.
↑Smith, Merritt; Marx, Leo (1994). Does Technology Drive History?: The Dilemma of Technological Determinism. Cambridge: MIT Press. p. 70. ISBN978-0262193474.
↑Kunz, William M. (2006). Culture Conglomerates: Consolidation in the Motion Picture and Television Industries. Publisher: Rowman & Littlefield Publishers, Inc. p. 2. ISBN978-0742540668.
நூல்தொகை
G.A. Cohen, Karl Marx's Theory of History: A Defence, Oxford and Princeton, 1978.
Staudenmaier, S.J., John M. (1985). "The Debate over Technological Determinism". Technology's Storytellers: Reweaving the Human Fabric. Cambridge: The Society for the History of Technology and the MIT Press. pp. 134–148.
Winner, Langdon. "Technology as Forms of Life". Readings in the Philosophy of Technology. David M. Kaplan. Oxford: Rowman & Littlefield, 2004. 103–113
Woolgar, Steve and Cooper, Geoff (1999). "Do artefacts have ambivalence? Moses' bridges, Winner's bridges and other urban legends in S&TS". Social Studies of Science 29 (3), 433–449.
White, Lynn (1966). Medieval Technology and Social Change. New York: Oxford University Press.
Furbank, P.N. "The Myth of Determinism." Raritan. [City] Fall 2006: 79–87. EBSCOhost. Monroe Community College Library, Rochester, NY. 2 April 2007.
Feenberg, Andrew. "Democratic Rationalization". Readings in the Philosophy of Technology. David M. Kaplan. Oxford: Rowman & Littlefield, 2004. 209–225