தோட்டத்திருவிழா

2014 திருவிழா, செர்மனி

தோட்டத்திருவிழா (garden festival) என்பது தோட்டக்கலை, தோட்டவடிவமைப்பு, இயற்கையை இரசித்தல் மற்றும் இயற்கை நிலத்தோற்றக் கலை ஆகியவற்றைக் கொண்டாட நடத்தப்படும் திருவிழா மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகும். உள்ளூர் தோட்டத்திருவிழாக்கள், அரசு தோட்டத்திருவிழாக்கள், தேசிய தோட்டத்திருவிழாக்கள் மற்றும் சர்வதேச தோட்டத்திருவிழாக்கள் ஆகிய தோட்டத்திருவிழாக்கள் உள்ளன. செர்மனியின் புகா என்ற தோட்டக்கலை நிகழ்ச்சியில் இருந்து இந்த யோசனை உருவானது. பிரிட்டன் நாடு 1984–92 காலங்களில் ஐந்து தோட்டத்திருவிழாக்களை நடத்தியுள்ளது. ஆனால் தோட்ட நிலங்களை திருவிழாவிற்கு பின் பயன்படுத்துவது குறித்து எந்த திட்டமும் வகுகப்படாததால் திருவிழாக்கள் பிசகிவிட்டன.[1][2][3]

அங்கீகாரம்

ஒரு நிகழ்ச்சி தேசிய கண்காட்சியாக தகுதி பெற, பி.ஐ.இ என்ற அமைப்பால் அங்கரீக்கப்படவேண்டும். இந்த அமைப்பு ஒரு தேசிய மாநாட்டில் உருவாக்கப்பட்டு, 1928-ல் பாரீசில் கையெழுத்திடப்பட்டது. ஒரு நிகழ்ச்சியை ஐ.ஏ.எச்.பி என்ற அமைப்பும் அங்கீகரிக்கலாம்.

மலர் கண்காட்சி

மலர் கம்பளம்

பிரான்சு நாட்டில் சாமாண்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச தோட்டத்திருவிழா மிகப் பிரபலமானது. இருப்பினும் சாமாண்ட் பி.ஐ.இ அமைப்பின் வரையரைக்குள் வரவில்லை. மற்ற நிகழ்ச்சிகளில் தோட்டக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அவை மலர் கண்காட்சிகளாகவே விவரிக்கப்பட்டன. இதற்கு சிறந்த உதாரணம் செல்சியா மலர் கண்காட்சி. இதில் தோட்டக் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இலண்டனில் உள்ள அபூர்வ தோட்டங்கள் மற்றும் தோட்டக்கலைகள் 2012ல் நடைபெற்ற செல்சியா நிகழ்வுகளில் இருந்து உருவானதாகும்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garden festivals
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "International Horticultural Exhibitions". Archived from the original on 8 June 2011. Retrieved 22 January 2011.
  2. Expositions, Bureau International (7 June 2019). "Qatar develops "Green Desert" vision for Horticultural Expo 2021 Doha". BIE இம் மூலத்தில் இருந்து 12 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230412092245/https://www.bie-paris.org/site/en/2021-doha. 
  3. "International Horticultural Exhibitions: History of exhibitions". AIPH. Archived from the original on 22 November 2019. Retrieved 20 June 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya