நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) கோயில்
சோமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், நங்கவள்ளி என்னுமிடத்தில் உள்ள கோயிலாகும்.[1] இக்கோயில் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமை சின்னம் எனப் போற்றப்படுகிறது.[2][3] இக்கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரும் புகழ்பெற்றவராக உள்ளதால் நங்கவள்ளி சோமேஸ்வரர் - லட்சுமி நரசிம்மர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. தல வரலாறு
தல புராணம்10 ஆம் நூற்றாண்டில் தொட்டி நங்கை என்ற பெண் சுமந்து சென்ற கூடையில் சாளக்கிராமக்கல் தென்பட்டதாகவும், அதனை தூக்கி எறிந்தாலும் மீண்டும் மீண்டும் அதே கல், கூடையில் இருந்ததைக் கண்டு பயந்து கூடையோடு குளத்தில் வீசிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்பு உடன்வந்த பெண்ணொருத்தி அந்த சாளக்கிராம கல் லட்சுமியின் வடிவம் என அருள்வந்து கூறியதால், அக்கல்லை தேடினர். புற்றுக்கருகே சாளக்கிராம கல் இருந்ததால் அங்கு குடிசை கட்டி வழிபட்டனர். விஜயநகர மன்னர்கள் இக்கோயிலை கற்றளியாக மாற்றி லட்சுமி நரசிம்மர் மற்றும் சிவபெருமானுக்கு சந்நிதி அமைத்தனர். சந்நிகள்
வேண்டுதல்கள்தோல் நோய்களால் பாதிக்கப்பட்டோர், அம்மனுக்கு அருகிலுள்ள புற்று மண்ணை எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என நம்புகின்றனர். தீராத நோய்கள், திருமணத்தடை, புத்திரபாக்கியம் என்று அனைத்திற்கும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டுதல் வைக்கின்றனர். வீடு, நிலம், வாகனம் வாங்கவும், புதிய தொழில் தொடங்கவும், துளசியை வைத்து ராமவாக்கு கேட்டு செல்வது பிரதானமாக உள்ளது. காரியங்கள் வெற்றி பெறும் நேரத்தில் விரும்பிய பொருட்களை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கிச் செல்வது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. முக்கிய பண்டிகைகள்இங்கு தமிழ் புத்தாண்டு, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. திறந்திருக்கும் நேரம்இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia