நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்![]() நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் நந்தமேட்டில் உள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வீரபாண்டீசுவரர் என்றும், அம்பிகை வைராக்கியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தில் பிரதோசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்தினத்தில் பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சன்னதிகள்![]() மூலவர் வீரபாண்டீசுவரர் லிங்கவடிவில் கிழக்கு நோக்கி உள்ளார். மூலவரின் இடதுபுறத்தில் வைராக்கியநாயகியின் சிலை அமைந்துள்ளது. வைராக்கியநாயகியின் முன்பு நந்தி வாகனமாக உள்ளது. மூலவரின் கோஸ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் நால்வர் சன்னதியும், கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. இக்கோயிலின் வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும், அருகே பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது. பிரதான வாசலின் இருபுறமும் சூரியன் மற்றும் சந்திரன் சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு எதிரே நந்திசிலையும், பலிபீடமும், கொடிமரமும் உள்ளது. கொடிமரத்தின் முன்னால் கொடிமர பிள்ளையார் அமைந்துள்ளது. விழாக்கள்
படத்தொகுப்பு
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia