நலிந்த எக்சு நோய்த்தொகை(Fragile X syndrome) (FXS) என்பது ஒரு மரபியல் கோளாறு ஆகும்.[1] அறிகுறிகள் பெரும்பாலும் இலேசானது முதல் மிதமான அறிவார்ந்த இயலாமையாக வெளிப்படலாம்.[1] உடல் அறிகுறிகளாக, நீண்ட குறுகலான முகம், பெரிய காதுகள், நெளிவான விரல்கள், பெரிய விந்தகங்களும் அமையும்.[1] இவர்களில் மூன்றில் ஒருவருக்கு சமூக ஊடாட்டச் சிக்கல்கள், மெதுவாக பேசவரல் போன்ற தன்னுழம்பல் நோய் இயல்புகளும் ஏற்படலாம்.[1] மிகைச் செயல்பாடு பொதுவாகவும் 10% பேருக்கு வலிப்புகளும் ஏற்படலாம்.[1] பெண்களை விட ஆண்களே மிகவும் தாக்கமுறுகின்றனர்.[1]
இதற்கு மருத்துவம் ஏதும் கிடையாது.[2] மிகத் தொடக்கநிலை இடையீட்டால் அனைத்து முழுத்திறமைகளையும் வென்றெடுக்கும் வாய்ப்பு உண்டு.[3] இவ்வகை இடையீடுகளாக, சிறப்புக் கல்வி, பேச்சு மருத்துவம், இயன்மருத்துவம், நடத்தைசார் மருத்துவம் ஆகியன அமையலாம்.[2][4]இதனால் ஏற்படும் வலிப்புகள், உணர்வுச் சிக்கல்கள், கடும் நடத்தைகள் அல்லது ADHD ஆகியவற்றுக்கு மருந்துகளைத் தரலாம்.[5] இந்நோய்த்தொகை ஆண்களில் 10,000 பேர்களில் 1.4 பேருக்கும் பெண்களில் 10,000 பேர்களில் 0.9 பேருக்கும் அமைகிறது.[6]