நவம்பர் 2021 இந்தியா மற்றும் இலங்கை வெள்ளம்நவம்பர் 2021 இந்தியா மற்றும் இலங்கை வெள்ளம் (November 2021 India and Sri Lanka floods) இலங்கையிலும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வெள்ளம் பெருகியது. [1][2] இலங்கையில் இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். [2] தமிழகத்தில் நவம்பரின் தொடக்கத்திலேயே 14 பேர் வரை இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். [2] குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. இராட்சத இயந்திர மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வாரியிறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வழக்கமாக மாநிலத்தின் மொத்த சராசரி மழை அளவு 14.2 மி.மீட்டர். ஆக இருக்கும். ஆனால், சென்னையில் அதிகபட்சமாக 67.08 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நவம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரையில் மட்டுமே இங்கு 346.1 மி.மீ மழை பெய்துள்ளது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எசு. ஆர். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [3] வானிலை ஆய்வுமைய அறிவிப்புகள்தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அது வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரும்போது அதிகனமழை பொழியும் என்று கூறியது. பன்னாட்டு வானிலை ஆய்வு மையமும் இதை உறுதிபடுத்தும் வகையில் குறைந்த காற்றழுதத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என்று கூறியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகன மழை பொழியும் என்று அறிவித்தது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia