நாகம்பட்டி ஊராட்சி, திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில், நாகம்பட்டி பஞ்சாயத்து, வேடசந்தூர் பேரூருக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பஞ்சாயத்தின் அலுவலகம் ஒட்டன்சத்திரம் ரோட்டில், சேணன் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக ஒட்டநாகம்பட்டி - புதூரும் - தென்கிழக்கு எல்லையாக நாகம்பட்டியும், வடகிழக்கு எல்லையாக கருக்காம்பட்டி - எல்லை காளியம்மன் கோவிலும், வடமேற்கு எல்லையாக குறியாண்டிக் குளமும், தென்மேற்கே சித்தமரம் நால்ரோடு பகுதியும் அமைந்துள்ளது. இதில் 13 கிராமங்கள் அமைந்துள்ளது. பிரதான தொழில் விவசாயம். நூற்பாலைகளும் சோப்பு அலைகளும் அமைந்துள்ளன. ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப் பள்ளியும் உள்ளது. அய்யனர் கோவில், ஒட்டநாகம்பட்டி முனியப்பன் கோவில், கருக்காம்பட்டி எல்லை காளியம்மன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் புகழ்பெற்றவை. பஞ்சாயத்தின் வருவாய் கிராமம் வேடசந்தூர் கிராமம் (கஸ்பா) ஆகும். ஒட்டநாகம்பட்டி - புதூர், ஒட்ட நாகம்பட்டி, சீத்தமரம், சேணன் கோட்டை, பெருமாள் கவுண்டன்பட்டி, குன்னம்பட்டி, லவு கணம்பட்டி, அரிச்சாகவுண்டனூர், நாகம்பட்டி, அய்யனார்நகர், தம்மனம்பட்டி, கருக்காம்பட்டி, கொண்ணாம்பட்டி, மகாத்மாநகர் (மாட்டு ஆஸ்பத்திரி). குறியாண்டிக் குளம் போன்ற சிறுகிராமங்களை உள்ளடக்கியது. Pin Code. 624710.[1]

  1. . 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya