நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020 (Nagorno-Karabakh Conflict 2020) என்பது அசர்பைஜானின் ஆயுதப்படைகளுக்கும், சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஆர்ட்சாக் குடியரசிற்கும் இடையே நாகோர்னோ-கராபக் பிராந்தியத்தில் ஆர்மீனியாவுடன் நடந்து வரும் ஆயுத மோதலாகும், இது தீர்க்கப்படாத நாகோர்னோ-கராபக் மோதலின் சமீபத்திய நீட்சியாகும். 2020 செப்டம்பர் 27 ஆம் தேதி காலை நாகோர்னோ-கராபாக் தொடர்பு எல்லையில் மோதல்கள் தொடங்கியது. இரு தரப்பினரும் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.[1] மோதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்மீனியா மற்றும் ஆர்ட்சாக் இராணுவச் சட்டத்தின்படி மொத்த அணிதிரட்டலை மேற்கொண்ட போது,[2] அசர்பைஜான் இராணுவச் சட்டத்தின் மூலம் ஊரடங்கினை அமல்படுத்தியது.[3] செப்டம்பர் 28 ஆம் நாள், அசர்பைஜானில் பகுதியளவு அணிதிரட்டலும் அறிவிக்கப்பட்டது.[4] பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மோதலை கடுமையாகக் கண்டித்து, பதட்டங்களைக் குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.[5] ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகியவை அசர்பைஜானுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. துருக்கி அசர்பைஜானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியுள்ளது, இருப்பினும் அதன் ஆதரவின் அளவு சர்ச்சைக்குரியதாக உள்ளது.[6] சர்வதேச பகுப்பாய்வாளர்கள் இந்த சச்சரவானது அசர்பைஜான் நாட்டினரால் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்,[7][8] மேலும், அதன் தாக்குதலுக்கான முதன்மையான நோக்கங்கள் தெற்கு நாகோர்னோ-கரோபக் பிராந்தியத்தில் உள்ள, குறைவான மலைப்பாங்கான, பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு எல்லைப்பகுதிகளை விட எளிதல் கைப்பற்றக்கூடிய பகுதிகளை கைப்பற்றுவதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.[9][10] அசர்பைஜானுக்கான துருக்கியின் ஆதரவானது தனது ஆதிக்கக் கோளத்தின் அளவை அதிகரித்துக் கொள்வது மற்றும் பிரச்சனையைப் பொறுத்தவரை அசர்பைஜானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பது ஆகியவை இந்தப் பகுதியில் உருசியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணும் அதன் முயற்சியாகும். ருஷ்யாவால் தரப்படுத்தப்பட்ட ஒரு மனிதாபிமான போர் நிறுத்தமானது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏதுவாக்கப்பட்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த போர் நிறுத்தமானது முறையாக அக்டோபர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia