நாண் லியான் பூங்கா

டாங் அரசவம்ச கோயில் கோபுரம்
டாங் அரசவம்சக் கட்டடகலையும் நீர்தடாகமும்

நாண் லியான் பூங்கா (Nan Lian Garden) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் ய் சின் மாவட்டத்தில், மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அத்துடன் கற்பாறை காட்சியகம் ஒன்றும் உள்ளது. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும்.

இந்த நாண் லியான் பூங்காவின் தொடர்ச்சியாக, புங் டக் வீதியின் மறுபுறம் சி லின் கன்னிமட பௌத்தக் கோயில் உள்ளது.

மேலதிகத் தகவல்கள்

நாண் லியான் பூங்காவின் உள்ளே கட்டப்பட்டுள்ள டாங் அரசவம்சக் கட்டட வடிவம்

இந்த பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவின் கட்டடங்கள் டேங் அரசவம்சத்தின் கட்டடக்கலை வடிவில் (Tang Dynasty Style.) கட்டப்பட்டுள்ளன.[1] சினாவில் வளரும் பழமையான அதேவேளை வித்தியாசமான மரங்கள் பூங்கா எங்கும் நடப்பட்டு பராமறிக்கப்படுகின்றன. அம்மரங்களில் பல மருந்து செலுத்தல் ஊடாகவே வளர்கின்றன. பூங்காவிற்கு செல்வோர், பூங்காவின் நினைவு பொருட்கள் வாங்குவதற்கான நினைவுப்பொருள் கடையொன்றும் உள்ளது. ஒரு மலை குன்றை அப்படியே செயற்கையாய் மாற்றியுள்ளனர்.

மலைக்குன்று உணவகம்

நான் லியான் பூங்கா மலைக்குன்று உணவகத்தின் காட்சி

இந்த மலைக்குன்று உணவகம் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே உள்ளே ஒரு கடை இருப்பது தெரியும். முழுதும் மரங்களும் பத்தைகளும் நிறம்பி இயற்கையின் தோற்றத்தை தருகின்றது. இருமருங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் மேலே இருந்து கொட்டிய வண்ணம் உள்ளன. உள்ளே உணவகம் சாளரங்கள் கண்ணாடிகளால் பொருத்தப்பட்டிருப்பதால், தண்ணீர் உள்ளே புகாதவாறு உள்ளது. உணவகத்தின் விலை ஐந்து நட்சத்திர சொகுசங்களுக்கு சமமானதாகும். அழைப்பேசி ஊடாக அல்லது இணையத் தளத்தின் ஊடாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.


பூங்கா காலை 7:00 மணி முதல் இரவு 9:00 வரை திறந்திருக்கும். பூங்கா திறந்திருக்கும் முழு நேரமும் சீனப் பாரப்பரிய இசை பூங்கா எங்கும் ஒலித்த வண்ணமே இருக்கும்.

வரலாறு

பூங்காவின் ஒரு பக்கக் காட்சி, எதிரே வானுயர் குடியிருப்புத் தொகுதிகள்


பூங்காவின் வடிவமைப்பு

அமைவிடம்

இந்த பூங்கா கவுலூன் தென்கிழக்குப் பகுதியில், இலக்கம் 60 புங் டக் வீதி, மாணிக்க மலை, வொங் டய் சின் எனும் முகவரியில் அமைந்துள்ளது. எம்டிஆர் தொடருந்தில் செல்வதானால் வெளியேற்றம் C2 இல் வெளியேறவேண்டும்.[2] மற்றும் பேருந்து சிற்றூந்து சேவைகளும் உள்ளன. இந்த பூங்காவின் மேற்காக பிரமாண்டமான ஹொலிவூட் அங்காடி உள்ளது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-21. Retrieved 2011-02-17.
  2. http://www.map.gov.hk/static/c/en/c6vdVQAAra.html

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya