நிலத் தட்டுகள்(tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலடிப் பகுதியும் இணைனந்த பாறைகளால் ஆனவை.புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ (62மி) அடர்த்தியினைக் கொண்டன.மேலும், கடலடி மேலோட்டுச் சிலிகானும் மெக்னீசியமும் உள்ளடக்கிய பகுதி (SIMA)சிமா(SIAL) எனப்படுகிறது.கண்ட மேலோட்டுச் சிலிகானும் அலுமினியமும் உள்ளடக்கிய பகுதி சியால்(SIAL) எனப்படுகிறது.
புவித்தோற்றவியல் வல்லுநர்கள் ஒவ்வொரு பாறைத் துண்டுகளும் சேருமிடத்தினை நிலத்தட்டுளின் விளிம்புகள் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இவை நிலையானவை அல்ல.இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவை.நிலத்தட்டுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன
பெரிய அல்லது முதன்மை நிலத்தட்டுகள்
சிறிய அல்லது இரண்டாம் நிலை நிலத்தட்டுகள்
நுண் நிலத்தட்டுகள்
பெரிய அல்லது முதன்மை நிலத்தட்டுகள்
..இது மிகப்பெரிய கண்டங்களையும்,பசிபிக் பெருங்கடலையும் கொண்டது.ஒரு பெரிய நிலத்தட்டு 20 m.k.m²
பசிபிக் தட்டு-103,300,000 km²
வட அமெரிக்கத் தட்டு-75,900,000 km²
யுரேசியத் தட்டு-67,800,000 km².
ஆப்பிரிக்கத் தட்டு-61,300,000 km²
இந்தோ ஆஸ்திரேலியத் தட்டு-58,900,000 km²
பெரும்பாலும் இரண்டு தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியத் தட்டு-47,000,000 km²
இந்தியத் தட்டு-11,900,000 km²
தென் அமெரிக்கத் தட்டு-43,000,000 km²
சிறிய அல்லது இரண்டாம் நிலை நிலத்தட்டுகள்
இந்தச் சிறிய தட்டுகள் வரைப்படத்தில் தென்படுவதில்லை.இத்தட்டுகள் ஒரு மில்லியன் km² பரப்புக்கும் இருபது மில்லியன் km² பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பளவைக் கொண்டனவாகும்
சோமாலியத் தட்டு-16,700,000 km²
நாஸ்கா தட்டு-15,600,000 km²
பிலிப்பைன் தட்டு-5,500,000 km²
அரேபியத் தட்டு-5,000,000 km²
கரீபியத் தட்டு-3,300,000 km²
கோகோசுத் தட்டு-2,900,000 km²
கரோலின் தட்டு-1,700,000 km²
சுகாட்டியத் தட்டு-1,600,000 km²
பர்மா தட்டு-1,100,000 km²
நியூகெப்ரிட்சுத் தட்டு-1,100,000 km²
நுண் நிலத்தட்டுகள்
இத்தட்டுகள் வரைப்படத்தில் பெரிய தட்டுகளுடன் இணைந்து கூட்டமாக காணப்படுகின்றன,இந்நுண் தட்டுகள் 1 m km² பரப்புக்கும் குறைவான பரப்பளவை கொண்டனவாகும்.[1][2][3][4]
Cordani, U.G.(2003). "Geochronology of Proterozoic basement from the Colombian Andes: Tectonic history of remnants from a fragmented Grenville Belt". {{{booktitle}}}, 1–10, 10o Congreso Geológico Chileno.
↑Tetsuzo Seno, Taro Sakurai, and Seth Stein. 1996. Can the Okhotsk plate be discriminated from the North American plate? J. Geophys. Res., 101, 11305-11315 (abstract)
↑Timothy M. Kusky; Erkan Toraman & Tsilavo Raharimahefa (2006-11-20). "The Great Rift Valley of Madagascar: An extension of the Africa–Somali diffusive plate boundary?". International Association for Gondwana Research Published by Elsevier B.V.
↑Niels Henriksen; A.K. Higgins; Feiko Kalsbeek; T. Christopher R. Pulvertaft (2000). "Greenland from Archaean to Quaternary" (PDF) (185). Greenland Survey Bulletin. Retrieved 2009-10-04.