நீராழமானி![]() நீராழமானி அல்லது நீராழக்கருவி (bathometer) என்பது நீரின் ஆழத்தைக் கண்டறியும் ஒரு கருவி ஆகும்.[1][2] முன்னர் இக்கருவியே கடலியல் ஆய்வுகளுக்காக முக்கியமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது இதன் பயன்பாடு அரிதாகவே உள்ளது. வரலாறுகுளியல் அளவீட்டு கருவிக்கான தொடக்க நிலை யோசனையானது லியோன் பாட்டிஸ்டா ஆல்பர்டி (1404-1472) என்பவரால் உருவாகியது. இதன்படி, ஒரு கொக்கி மூலம் சில நிலையான பளுக்கள் இணைக்கப்பட்ட ஒரு உட்குழிவான கோளத்தை மூழ்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கோளப்பகுதி அடிமட்டத்தை அடைந்ததும், அது நிலைப்பாட்டிலிருந்து பிரிந்து மீண்டும் மேலெழுந்தது. ஆழமானது அக்கோளம் மேற்பரப்புக்கு வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரத்தினடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.[3] ஜேக்கப் பெர்க்கின்சு (1766–1849) என்பவர் நீராழமானியை நீரின் அழுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு முன்மொழிந்தார்.[4] இந்தக் கருவியில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள உருளைக்குள் அடைக்கப்பட்ட நீரை அழுத்தும் உந்து தண்டின் இயக்கமானது உருளைக்கு வெளிப்புறமுள்ள நீரின் அழுத்தத்தைச் சார்ந்துள்ளது, தொடர்ச்சியாக அந்த அழுத்தமானது நீரின் ஆழத்தைச் சார்ந்ததாக உள்ளது. உந்து தண்டு இயங்கிய தொலைவானது அது வெளியே வரும் போது அளந்தறியப்படுகிறது.[5] மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia