நுகப்பூஞ்சைத் தொகுதி
நுகப்பூஞ்சைத் தொகுதி (Zygomycota), கருமுட்டைப் பூஞ்சைத் தொகுதி என்பது பூஞ்சைத் திணை சார்ந்த முந்தைய பூஞ்சைத் தொகுதியாகும். இதன் உறுப்பினங்கள் இப்போது மியூக்கோரோமைக்கோட்டா, சூபேகோமைக்கோட்டா எனும் இரண்டு பூஞ்சைத் தொகுதிகளின் உறுப்பினங்களாக அமைகின்றன.[1] இதில் தோராயமாக 1060 இனங்கள் அறியப்பட்டுள்ளன.[2] இவை பெரும்பாலும் தரையில் அல்லது அழுகும் தாவரப் பொருட்களில் அல்லது இறந்த விலங்குடல்களில் அமைகின்றன. சில தாவரங்கள், பூச்சிகள், சிறு விலங்குகளின் ஒட்டுண்ணிகளாக அமைய, பிற மரங்களில் இணைவாழ்வு மேற்கொள்கின்றன.[3] நுகப்பூஞ்சையின் காளான் இழையில் பாலினக்கலங்கள் உருவாகும்போது பிளவுள்ள இணைகலமாக ஆக அமையும் அல்லது இறந்த காளான் இழை உதிர்ந்துவிடும். நுகப்பூஞ்சைத் தொகுதி இப்போது தனித்தொகுதியாகக் கருதப்படுவதில்லை. வேர்ச்சொல்லியல்![]() நுகப்பூஞ்சைத் தொகுதி என்பது பாலினவகை இனப்பெருக்கத்தின்போது உருவாகும் கோள வடிவ எதிப்புத்திறம் மிக்க நுகவிதைத்தூள்களைக் கொண்டமையும் நுகவடிவ விதைத்தூளகங்களைச் சுட்டுகிறது. நுகவடிவ விதைத்தூளகங்கள் இத்தொகுதி சார்ந்த இனங்களின் சிறப்புப் பன்மையாகும். இங்கு, சைகோசு (Zygos) எனும் சொல் கிரேக்க மொழியில் "இணைதல்" அல்லது " நுகம்"என்று பொருள்படும். இது விதைத்தூள்களை உருவாக்கும் இரண்டு காளான் இழைகளின் இணைந்த நுக வடிவத்தைக் குறிக்கும். -மைக்கோட்டா (mycota) பூஞ்சைத் தொகுதிக்கான பின்னொட்டு அல்லது விகுதி ஆகும்i.[4] ![]() "விதைத்தூள்" எனும் சொல் பூஞ்சை இன விரவலையும் பரவலையும் செய்யும் கட்டமைப்பைக் குறிக்கிறது. நுகப்பூஞ்சையின் விதைத்தூள்கள் பாலின முறையிலோ பாலினமற்ற முறையிலோ உருவாகின்றன. உருவாதலுக்கு முன் விதைத்தூள் முடக்கநிலையில் இருக்கும். இந்தப் பருவத்தில் வளர்சிதைமாற்ற வேகம் குறைவாக இருக்கும். இப்பருவம் சில மணிகள் முதல் பல ஆண்டுகள் வரையில் கூட அமையலாம்மிந்த முடக்கம் இருவகைகளில் உள்லன. ஒன்று புற முடக்கம்; இது வெப்பநிலை, ஊட்டக் கிடைப்புத்திறம் போன்ற சுற்றாடல் காரணிகளால் கட்டுபடுத்தப்படும். இரண்டாவது அகமுடக்கம் அல்லது உட்கூற்று முடக்கம் ஆகும். இது விதைத்தூளின் வளர்சிதை மாற்றப் பான்மையைச் சார்ந்துள்ளது. இந்த முடக்கநிலையில் சுற்றாடல் நிலைமைகள் உகந்ததாக இருந்தாலும் கூட விதைத்தூள் உருவாதல் முடக்கப்படுகிறது. உடல விதைத்தூள்கள்நுகப்பூஞ்சைகளில் உடல்விதைத்தூள்கள் பாலினமற்ற முறையில் அதாவது உடலியற் பகுப்பால் உருவாகிறது. இவை உடலியற் விதைத்தூளகங்கள் எனும் சிறப்புக் கட்டமைப்புகளில் உருவாகின்றன. இந்தக் கட்டமைப்புகள் பூஞ்சை இனத்தைப் பொறுத்து சில முதல் பல்லாயிர விதைத்தூள்களைப் பெற்றுள்ளன. இந்த உடலியற் விதைத்தூளகங்கள் சிறப்புநிலை காளான் இழைகளில் அமைகின்றன. இவை புவி ஈர்ப்பு விலக்கிகள்; ஆனால், ஒளி வேட்பிகள். எனவே, ஒளிச்சூழலில் விதைத்தூள்களை நன்கு பரவச் செய்கின்றன. விதைத்தூளகச் சுவர்கள் மெல்லியவை; எனவே, இவை மழைத்துளிகளாலும் கடந்துசெல்லும் விலங்குகளாலும் எளிதாக அழிந்து முதிந்த உடல விதைத்தூள்களைப் பரவச் செய்கின்றன. இந்த விதைத்தூள்களின் சுவர்கள் சில இனங்களில் விதைத்தூள் பொலனின்க்ளைப் பெற்றுள்லன. இந்த விதைத்தூள் பொலனின்கள் பீட்டா கரோட்டீன்களால் ஆகியுள்ளன. எனவே, இவை மிகவும் வீறுடன் உயிரியல், வேதியியல் தரமிழப்புக்கு எதினையாற்றுகின்றன. நுகப்பூஞ்சையின் விதைத்தூள்கள் அவற்றின் நீடித்து நிலைக்கும்திறம் பொறுத்து இருவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை உறைவிதைத்தூள்கள், நுகவிதைத்தூள்கள் என்பனவாகும். உறைவிதைத்தூள்உறைவிதைத்தூள்கள் பாலின விதைத்தூள்களில் இருந்து வேறுப்ட்ட பாலினமற்ற விதைத்தூள்கள் ஆகும். இவை உறைந்தநிலை அல்லது ஓய்வுநிலை விதைத்தூள்கள் ஆகும். இதன் முதமயான செயல்பாடு காளான் இழைப்படலம் நீடித்து நிலைப்பதாகும். இந்த உறைவிதைத்தூள்கள் காளான் இழைப்படலங்கள் சிதைந்ததும் வெளியிடப்படுகின்றன. உறைவிதைத்தூள்கள் பரவுதலுக்கான இயங்குமுறை இல்லை. நுக்ப்பூஞ்சைகளில் உறைவிதைத்தூள்களின் உருவாக்கம் இழையிடையில் அல்லது நுனியில் அமையலாம். தம் செயுல்லுக்கு ஏற்ப, உறைவிதைத்தூள்கள் தடிப்பானக் கலச்சுவருடனும் ஆழ்நிறத்தோடும் அமைகின்றன. ![]() நுகவிதைத்தூள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia