நுங்கு ஆப்பிள்
![]() நுங்கு ஆப்பிள் (Chrysophyllum cainito) என்பது சப்போட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டல மரமாகும். இது இசுத்மசு பனாமாவில் முதலில் பதப்படுத்திய வீட்டுவகையாகும்.[1] இது பிறகு பேரான்ட்டெசுவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் பரவி இப்போது தென்கிழக்காசியா உட்பட வெப்பமண்டலம் முழுவதும் பயிரிடப்படுகிறது.[2] இது வேகமாக 20 மீட்டர் உயரம் வளர்கிறது. இதன் பழம் ஆப்பிள் வடிவத்திலும் வழவழப்பாகவும் 5 முதல் 10 செ.மீ விட்டம் உடையதாகவும் இருக்கும். பழச்சதை மென்மையானதாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதன் பழம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மலைப்பகுதியில் விளைகிறது. பழங்கள் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் கிடைக்கும். ஒரு மரத்தலிருந்து ஒரு ஆண்டில் 70 கிலோ பழங்கள் அறுவடை செய்யலாம். இம்மரம் விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன. மருத்துவப் பண்புகள்இதன் இலை, பழம் மருந்துக்கு உதவுகின்றன. இதன் பழத்தை மணப்பாகு செய்து சுர நோயாளிகளுக்கு புளிப்பு பானமாகத் தரலாம். மருந்துகளுக்கு சாயம் ஏற்ற இம்மரத்தின் பழங்களைப் பயன்படுத்தலாம். அம்மரத்தின் இலை, வேப்பிலை, ஓரிரண்டு வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் படுக்கை புண்களுக்குப் போட அவை உலர்ந்து குணம் தெரியும்.[3] காட்சிமேடை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia