These audio files were created from a revision of this article dated
Error: no date provided
, and do not reflect subsequent edits.
நுண்ணறிவு வடிவமைப்பு (Intelligent design) என்பது பேரண்டம் மற்றும் உயிரினங்களைப் படைத்தவர் நுண்ணறிவு கொண்ட ஒரு வடிவமைப்பாளர் என்னும் கொள்கை. இயற்கைத் தேர்வு கோட்பாடு சொல்வது போன்று கர்த்தா எவருமின்றி அண்டமும் உயிரனங்களும் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க இயலாது என்று நுண்ணறிவு வடிவமைப்பை பின்பற்றுவோர் கூறுகின்றனர். இதற்கும் படைப்புவாதம் மற்றும் நோக்கியல்வாதம் (teleological argument) போன்ற கோட்பாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், அவற்றைப் போன்று இது வடிவமைப்பாளர் / கர்த்தாவின் தன்மையைப் பற்றி வெளிப்படையாக ஒன்றும் கூறுவதில்லை. எனினும் இது புதிய-படைப்புவாதம் என்றே கருதப்படுகிறது.[1][2][3][4][5]
இக்கோட்பாடு ஐக்கிய அமெரிக்காவில் படைப்புவாதத்தை பள்ளி அறிவியல் வகுப்புகளில் கற்பிக்கக்கூடாது என்ற சட்டத் தடையை மீறுவதற்காக உருவாக்கப்பட்டது. படைப்புவாதம் பள்ளி அறிவியல் வகுப்புகளில் இடம்பெறக்கூடாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அத்தீர்ப்பிலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும் படைப்புவாதத்தை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய, கண்டுபிடிப்பு கழகம் (Discovery Institute) என்ற பழமைவாத அமைப்பொன்றால் நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. 1990களில் இருந்து அமெரிக்கப் பள்ளிகளின் அறிவியல் மற்றும் உயிரியல் பாடப்புத்தகங்களில் படிவளர்ச்சிக் கொள்கைக்கு இணையாக இதையும் பாடமாக்க வேண்டுமென்று கிறித்துவஅடிப்படைவாதிகளும்பழமைவாதிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இது குறித்து பல வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் போன்ற பகுதிகளில் நுண்ணறிவுக் கோட்பாட்டை பாடமாக்கும் முயற்சிகள் கடும் கண்டனத்துக்காளாகி தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் துருக்கியில் இக்கோட்பாடு வரவேற்பைப் பெற்றுள்ளது.[6][7][8][9][10][11][12]
அறிவியலாளர்களில் மிகப் பெரும்பான்மையானோர், நுண்ணறிவுக் கோட்பாட்டை நிராகரிக்கின்றனர். அமானுட / மீஇயற்கை வாதங்களை அறிவியலில் புகுத்தும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.[13]
↑Scott, Eugenie C. (2004). "Chapter 6: Neocreationism". Evolution vs. Creationism: An Introduction. University of California Press. pp. 113–133. ISBN9780520246508.