நெப்டியூனியம்(IV) பாசுபைடு
நெப்டியூனியம்(IV) பாசுபைடு (Neptunium(IV) phosphide) என்பது Np3P4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1] தயாரிப்பு750 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடமாக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட குவார்ட்சு குழாயில் நெப்டியூனியம் மற்றும் சிவப்பு பாசுபரசு தனிமங்கள் விகிதாச்சார அளவுகளில் இணைத்து நெப்டியூனியம்(IV) பாசுபைடை உருவாக்கலாம்:[2][3]
பண்புகள்இயற்பியல் பண்புகள்நெப்டியூனியம்IV) பாசுபைடு தண்ணீரில் கரையாது. I 43d என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக வடிவமாக நெப்டியூனியம்(IV) பாசுபைடு கருப்புநிறத்துடன் படிகமாகிறது. Th3P4 சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பில் நெப்டியூனியம்IV) பாசுபைடு உள்ளது.[4] வேதிப் பண்புகள்நெப்டியூனியம்(IV) பாசுபைடு அடர் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து பச்சைநிற கரைசலைத் தருகிறது:[5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia