நெய்க் கொட்டைநெய்க்கொட்டை (தாவரப் பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா). (Harpullia arborea) சபிண்டேசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனமான இது இந்தியாவில் இது இந்தியத் துணைக்கண்டம், இலங்கை முழுவதும் தென்கிழக்காசியா மற்றும் மலேசியா முதல் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கே அமைதிப் பெருங்கடல் வரை உள்ளது. இது ஆத்திரேலியாவில் குக்டவுன் துலிப்வுட் என்று பொதுவாக அறியப்படுகிறது. இது 1 கி.மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்கிறது. இது அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இதன் அடிமரம் சீராக இருக்கும். பட்டை இளம் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் இலை மாற்று அடுக்கில் 3-4 இரட்டை சிறகு கூட்டிலையாக இருக்கும். இது 6 முதல் 10 ஓலைகளைக் கொண்டிருக்கும். அல்லி இதழ்கள்4-5 வழக்கமான கால்களுடன் குறுகி நீள்வட்டமாகவும் செதில்களற்றும் இருக்கும். வட்டத்தட்டு தெளிவற்றது. மகரந்தத் தாள்கள்5-8 வட்டத்தட்டின் உள்புறத்தில் செருகியிருக்கும். மகரந்தக்கம்பி மேன்மையாய் இருக்கும். மகரந்தப்பை நீள்சதுரமாயிருக்கும். சுலகமுடி மெலிந்து, ஏறக்குறைய திருகியிருக்கும். ஓவ்வொரு சூலக அறையும் இரண்டு சூல்களைக் கொண்டிருக்கும். கனிகனி இரண்டு தடுக்கிதழ்களுடன் பழுப்பு அரஞ்சு நிறம் கொண்டது. பயன்கள்காய்கள் சோப்பு போன்ற நுரை தரும். இவ்விதையில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாத வலிக்குத் தடவலாம்.[1][2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia