பகுப்பு பேச்சு:பார்லேரியா பேரினம்

இப்பேரினத்தின் முக்கியத்துவம்

பலவித தாவர வேதியியல் ஆய்வுகளில் இப்பேரினம் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு உழவன் (உரை) 02:39, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]

இந்தப் பேரினத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனிப் பக்கங்கள் இருப்பதாகத் தெரிகின்றது. அவற்றில் கூடுதல் செய்திகள் இல்லாமல் ஒரே பாங்கான கட்டுரையாக உள்ளது. தனித்தன்மை வாய்ந்த செய்திகள் இல்லாவிட்டால் குறிப்பிடத்தக்கமை இல்லாமல் போகும் என நினைக்கிறேன். தனிப்பக்கத்திற்குப் பதிலாக இந்த இனங்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பட்டியலிடலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 10:05, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]
இணைக்கப்பட்டுள்ள விக்கித்தரவினை பார்க்கவும். தனித்துவம் இருப்பதால் தான் பன்னாட்டு அறிஞர்கள் தனித்தனி இனமாக அறிவித்துள்ளனர். சான்றுகளை காணவும். மேலும் பல மொழிகளில் இருக்கும் போது தமிழில் இருக்கலாம். குறிப்பிடத்தக்கமை என்று பொதுவாக சொல்லாமல் விளக்கம் அளிக்கவும். உழவன் (உரை) 11:31, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை எண்ணிக்கையை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளை, தானியங்கி கொண்டே உருவாக்கலாம். கட்டுரைகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே பாணியில் அமைந்துள்ளன. செபுவான மொழி விக்கி இவ்வாறான கட்டுரைகளை அதிகம் உருவாக்கியுள்ளது. அது உருவாக்கிய கட்டுரைகளில் பல ஆ.வியிலும் இல்லை. 6122076 கட்டுரைகள் செபுவான விக்கியில் உள்ளன. ஆனால், அதன் கட்டுரை ஆழம் 2 ஆகும். --AntanO (பேச்சு) 12:57, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதில் உள்ள தாவர இனங்களை உருவாக்கக் கேட்டுள்ளேன். இதற்கு மேல் எனக்கு வழிகாட்நேரமில்லை. முடிந்தால் அவர்களுக்கு வழிகாட்டிட இருவரையும் கேட்டுக் கொள்கிறேன். வளர்ச்சி என்பது மெதுவாகத்தான் வரும். இதுபோல உருவாக்கினால் அக்கட்டுரைகள் நீக்கப்படும் என்று அவரவர் பேச்சுப் பக்கத்தில் கூறி விடுங்கள். உழவன் (உரை) 14:25, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள் மேம்பாடு

பார்லேரியா பிரிடோரியன்சிசு இதில் மேற்கோள் மேம்பாடு கற்று, கற்பிக்க வேண்டும். உழவன் (உரை) 16:01, 18 பெப்பிரவரி 2024 (UTC)

மேம்பாடு

@Neechalkaran:

வணக்கம்

பார்லேரியா என்ற தாவரவியல் பேரினக் கட்டுரையில், அதன் இனங்களில் 100 மட்டும் பட்டியலிட்டுள்ளேன். அதில் இதுவரை உருவாக்கிய 32 தமிழ் கட்டுரைகளை முதலிலும், பிற தாவரவியல் பெயர்களுக்கு சான்றுகளுடன் இணைத்துள்ளேன். ஆனால், இந்த இனத்தில் மேலும் ஏறத்தாழ 200 இனங்கள் உள்ளன. அவற்றினை சான்றுடன் இணைக்க இயலவில்லை. வழு வருகிறது. காண்க:பகுப்பு பேச்சு:பக்கங்களில் வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது. எனவே மீதமுள்ள இனங்களை சான்றுகளுடன் துணைப்பக்கமாக உருவாக்க எண்ணுகிறேன். உங்களின் பரிந்துரை தருக. உழவன் (உரை) 02:50, 14 மார்ச்சு 2024 (UTC)

Yபேச்சு:துன்பேர்சியா கட்டுரையில் மூவர் உரையாடியதால் அதில் இதே போன்ற மாற்றங்களே செய்துள்ளேன். உழவன் (உரை) 07:20, 10 ஏப்பிரல் 2024 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya