பகுப்பு பேச்சு:மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்

கவனத்திற்கு

@Neechalkaran: வணக்கம். இதனை சரிபார்க்க வேண்டும். உங்களின் உதவி தேவை.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:29, 20 சூலை 2022 (UTC)Reply

இதில் பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள்கள் உள்ளன. தேவையில்லை என்றால் மேற்கோள்கள் தேவை எனச் சுட்டும் வார்ப்புருவை நீக்கலாம். HotTemp கருவியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 19:17, 20 சூலை 2022 (UTC)Reply

@Neechalkaran:
பரிந்துரை:
சுமார் 20 கட்டுரைகளை random முறையில் திறந்து பார்த்தேன். இவையனைத்தும் இந்தத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். இக்கட்டுரைகளில் மேற்கோள்கள் இருக்கின்றன. எனவே, தானியங்கி ஒன்றினை இயக்கி 12,047 கட்டுரைகளையும் பரிசோதிக்க இயலுமா என்பதனைப் பாருங்கள்.

ஐயம்:
அனைத்துக் கட்டுரைகளிலும் மேற்கோள்கள் பகுதி கீழ்வருமாறு தெரிகிறது. இது ஏன்? சரிசெய்து உதவவும்.

  • தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  • தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:54, 21 சூலை 2022 (UTC)Reply
URL பிழை நீக்கப்படுகிறது. எ.கா: அத்திமூர் சேடாத்தம்மன் கோயில். ஆனால் {{கூடுதல் சான்று தேவை (கோயில்)}} எனும் உப வார்ப்புரு உள்ளது. --AntanO (பேச்சு) 04:17, 21 சூலை 2022 (UTC)Reply

@AntanO: மிக்க நன்றி. சுமார் 30 கட்டுரைகளை random முறையில் திறந்து பரிசோதித்தேன். சரியாக இருக்கின்றன. தானியங்கியை இயக்கி, URL பிழையை நீக்கியதன் மூலமாக சுமார் 12,000 கட்டுரைகளில் துப்புரவு செய்திருக்கிறீர்கள். பெரிய உதவி; நன்றி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 23 சூலை 2022 (UTC)Reply

@Neechalkaran: அனைத்துக் கட்டுரைகளிலும் இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனும் தகவற் பிழை இருக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும். இந்தத் தகவலுக்கு அருகில் இருக்கும் வார்ப்புருவால், அனைத்துக் கட்டுரைகளும் 'மேற்கோள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள் 'எனும் பகுப்பின்கீழ் வந்துள்ளன.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 23 சூலை 2022 (UTC)Reply

அனைத்துக் கட்டுரைகளிலும் அவ்வாறு இல்லை. ¹. மேலும் எந்த மேற்கோளின் படி இவை முழுவதும் தவறு என்ற முடிவிற்கு வர இயலும்? ஆங்காங்கே சில கட்டுரைகளில் பிழை இருக்கலாம், அதன்பொருட்டே மேற்கோள் தேவை என்று வார்ப்புருவைச் சேர்த்திருந்தோம். இவற்றை மனிதசரிபார்ப்பில் நீக்கி சரியான ஆண்டை இடலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:40, 24 சூலை 2022 (UTC)Reply

@Neechalkaran: பதிலுரைக்கு நன்றி. random முறையில் 30 கட்டுரைகளை திறந்து பார்த்ததில் அனைத்துக் கட்டுரைகளிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று இருந்தது. இதனடிப்படையிலேயே //அனைத்துக் கட்டுரைகளிலும் இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனும் தகவற் பிழை இருக்கிறது// என கருத்திட்டேன். இயல்பில் அவ்விதம் இருக்க வாய்ப்பில்லை எனும் கருத்தின் அடிப்படையிலேயே பிழை என குறிப்பிட்டிருந்தேன். (மேற்கோள் குறித்து நான் எழுதியதற்கும் இதற்கும் தொடர்பில்லை. 'மேற்கோள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்' எனும் பகுப்பின்கீழ் வந்துள்ளமைக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது, நான் அறிந்தவற்றை குறிப்பிட்டிருந்தேன்). உங்களின் பதிலுக்குப் பிறகு, இன்னும் 30 கட்டுரைகளை திறந்து பார்த்தேன். அவற்றில் 80% கட்டுரைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பதாகத்தான் இருக்கிறது. 20% கட்டுரைகளில் பிற நூற்றாண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. மனித ஆற்றல் வாயிலாக இதனை சரிபார்ப்பது, பிழை இருந்தால் எப்படி நீக்குவது என்பது குறித்து பார்க்கிறேன்.
  2. ஒரு உதவி: ஒவ்வொரு நூற்றாண்டும் எந்தெந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதான ஒரு பட்டியல் எடுத்துத் தர இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:16, 24 சூலை 2022 (UTC)Reply
எல்லாக் கட்டுரையின் மேற்கோளில் உள்ள பக்கத்தில் அவை தரவுகளாகக் கிடைக்கும். விரும்பினால் மூலத் தரவுகள் கோப்பினையும் பார்க்கலாம். அதில் Form1 இல் -> "திருக்கோயில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது" என்ற நெடுவரிசையில் தகவல்கள் உள்ளன. விக்கிப்பீடியக் கட்டுரையின் தலைப்பு கூகிள் விரிதாளின் கடைசி நெடுவரிசையில் Wiki title என்ற பெயரில் இருக்கும். AY மற்றும் Y நெடுவரிசையை வடிகட்டினாலே நீங்கள் கேட்ட தகவல் மாவட்ட வாரியாகக் கிடைக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 04:12, 25 சூலை 2022 (UTC)Reply

@Neechalkaran: வழிகாட்டலுக்கு மிக்க நன்றி! வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 25 சூலை 2022 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya