பக்கவாட்டில் நகரும் பாம்புகள்
பக்கவாட்டில் நகரும் பாம்பு (sidewinder, horned rattlesnake, sidewinder rattlesnake[3]) தென்மேற்கு அமெரிக்கா, தென் கலிபோர்னியா மற்றும் வடமேற்கு மெக்சிகோவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் குழி விரியன் இனத்தைச் சேர்ந்தது. இதர குழிவிரியன்களைப் போல இதுவும் விஷமுள்ளது. இதன் மூன்று உள்ளினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[4] இவை பக்கவாட்டில் நகரும் போது மணலில் இவற்றின் உடல் பதிவுகள் கோலம் போட்டது போலிருக்கும். ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவிற்கு செல்கையில் அதன் உடலில் இரு மிக சிறிய பகுதிகள் மட்டும் புள்ளியாக தரையைத் தொடுகிறது. இதன் சிறிய இனத்தில் முதிர்ச்சியடைந்தவை 43 மற்றும் 76 cm (17 மற்றும் 30 அங்) நீளமுடையவை.[3] முதிர்வடைந்த பெரும்பான்மையானவை 50–80 cm (19.5–31.5 அங்) நீளமுடையவை.[5] இப்பாம்புகள் மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இப்பாம்பினத்தில் ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகளே அளவில் பெரிதாக இருக்கும்.[6] பாலைவனத்தில் மட்டுமில்லாது வழவழப்பான பரப்புகளிலிலும் விரைவாக செல்லும். இப்பாம்புகளை கொம்புள்ள சங்கிலி கருப்பன் என்றும் கூறுவர். ஏனெனில் இப்பாம்புகளின் கண்களுக்கு மேல் உள்ள செதில்கள் பார்க்க கொம்புகள் போல் இருக்கும். இவை பழுப்பு நிற உடலையும் அதன் மேல் சாம்பல் அல்லது கரும்பழுப்பு நிற பட்டைகளையும் உடையவை. இவற்றின் உணவு பல்லிகள், சிறிய அளவு கொறித்துண்ணிகள், கங்காரு எலிகள், சிறிய பறவைகள் போன்றவையாகும். இப்பாம்புகள் பொதுவாக இரவிலே இறை தேட கூடியவை. பகல் நேரங்களில் மணலுக்கடியில் புதைந்து கொள்கின்றன. இவை சுமார் 1.5 முதல் 2 அடி நீளம் இருக்கும். இவை மிகவும் விசத்தன்மை வாய்ந்த பாம்பினங்களாகும். மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia