படைப்பின் தூண்கள்![]() ![]() ![]() படைப்பின் தூண்கள் (Pillars of Creation) என்பது அபிள் விண்வெளித் தொலைநோக்கியால் புவியில் இருந்து 6,500–7,000 ஒளியாண்டுகள் (2,000–2,100 pc; 61–66 Em) தொலைவில் உள்ள கழுகு நெபுலா என்று அழைக்கப்படும் விண்மீன்களிடை வாயு மற்றும் தூசு மண்டலத்தில் 1995 ஏப்ரல் 1 அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிக்கும்.[1] மூன்று தூண்களை கொண்டதான இந்தப் பகுதியானது மிகவும் அதிக தகவல்களை தருகிறது.[2] இப்படத்தில் ஊதா வண்ணம் ஆக்சிசனையும் சிவப்பு வண்ணம் சல்பரையும் பச்சை வண்ணம் நைட்ரசன் மற்றும் ஹைட்ரசனையும் குறிக்கும். நெபுலா என்று அழைக்கப்படும் வாயு மற்றும் தூசு மண்டலம் புதிய புதிய நட்சத்திரங்களை உண்டாக்குவதால் படைப்பின் தூண்கள் என்ற பெயரை பெற்றது.[3] கழுகு நெபுலாவை சுவிட்சர்லாந்தைச்ச் சேர்த்த விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜீன் பிலிப் லோய்ஸ் டி செசியாக்ஸ் என்பவர் 1745ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இப்புகைப்படத்தை அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஜெப் எசுட்டர், பவுல் இசுக்கோவன் ஆகியோர் எடுத்திருந்தனர். மீண்டும் இதன் அதிக தெளிவுத்திறன் கொண்ட புகைப்படமும் அகச்சிவப்புக் கதிர் புகைப்படங்கள் 2011 இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் எர்செல் விண்ணாய்வகத்திலும், பின்னர் 2014 இல் அபிளினாலும் எடுக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்படைப்பின் தூண்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia