பணிமுன் பயிற்சிபணிமுன் பயிற்சி என்பது மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சி ஆகும். ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பயிலும் துறை ஆகும்.ஆசிரியர் பயிற்சி பயில்வதற்கு முன் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருத்தல் (தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,வரலாறு,புவியியல்) கட்டாயமாகும். பள்ளிக்கல்வி அமைப்புநமது பள்ளிக்கல்வி முறையில் பலநிலைகள் உள்ளன.ஆசிரியரின் கற்பிக்கும் முறையும் திறனும் ஒவ்வொரு நிலைக்கும் வேறுபடுகின்றன.அந்நிலைக்கு எற்றவாறு ஆசிரியர்கள் உருவாக்கப்படவேண்டும்.இதனை கருத்தில் கொண்டு இந்திய கல்விக் குழு 1882 தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கென தனித்தனி ஆசிரியர் கல்வி பயிற்சிகள் வழங்க திட்டமிட்டது.இதனால் பின்வரும் ஆசிரியர் கல்விப் படிப்புகள் வழங்கபட்டு வருகின்றன.
மழலையர் கல்விச் சான்றிதழ்அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு 2 ஆண்டு காலக் கல்வியாக வழ்ங்குகிறது. இவர்கள் கிண்டர்கார்டன் பள்ளிகள்,மாண்டிசோரி முறை பள்ளிகள், சிறார் பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள், மழலையர் கல்வி மையங்களில் பணிப்புரிய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். ஆசிரியர் கல்விப் பட்டயச் சான்றிதழ்மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு 2 ஆண்டு கால கல்வியாக வழ்ங்குகிறது.. இவர்கள் 1-5 வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் பணிப்புரிய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இளநிலைக் கல்வியியல்இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற பின் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டியவர்கள் இளங்கலை கல்வியியல் பட்டம் பயில்வது கட்டாயம். பல்கலைக்கழகத்திலுள்ள கல்வியியல் துறையில் கல்வி பயிலலாம் இளங்கலை பட்டத்துடன் இக்கல்வி பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் எனவும் முதுகலை பட்டத்துடன் இக்கல்வி பயின்றவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனப்படுவர். முதுகலைக் கல்வியியல்இளநிலைக் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இக்கல்வி பெற முடியும்.இவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். ஆய்வியல் நிறைஞர் பட்டம்முதுநிலைக் கல்வியியலில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இக்கல்வி பெற முடியும்.ஆசிரியர் பயிற்றுநர்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தங்கள் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்திக்கொள்ள இக்கல்வி பயன்படுகிறது.இக்கல்வி பயின்றவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். ஆய்வியல் முனைவர் பட்டம்ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இக்கல்வி பெற முடியும்.முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ 3 ஆண்டுகள் பயில வேண்டும். மேற்கோள்கள்.[1]
|
Portal di Ensiklopedia Dunia