பனி பாசு
பாணி பசு (Bengali: বাণী বসু, 11 மார்ச் 1939[1]) சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒரு இந்திய வங்காள எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பேராசிரியர். கல்விஅவர் லேடி பிரபோர்ன் கல்லூரியிலும் ஸ்காட்டிய சர்ச் கல்லூரியிலும் முறையாகப் பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] தொழில்முறை வாழ்வுஜன்மபூமி மாத்ருபூமியை வெளியிட்டதன் மூலம் புதின எழுத்தாளராகத் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். தனது தொழில்முறை வாழ்வைை 1980-ல் "ஆனந்தமாலா" என்ற ஒரு சிறார் இதழில் ஒரு எழுத்தாளராகத் தொடங்கினார். பின்னர் "தேஷ்" உள்ளிட்ட அக்காலத்தின் பிற இதழ்களிலும் தன் படைப்புகளை வெளியிட்டார். அவர் ஒரு புதின, சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான எழுத்தாளர் எனப்பலவாறாக அறியப்படுகிறார். அவரது சில புனைகதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.[3] அவரது புனைகதைகள் பரந்த அளவில் பாலினம், வரலாறு, தொன்மம், சமூகம், உளவியல், இளமைப் பருவம், இசை, பாலியல் நோக்குநிலை, இயற்கைக்கு அப்பாற்பட்டவை உள்ளிட்ட பலவற்றைக் கருப்பொருளாகக் கொண்டவைு. படைப்புகள்அவரது முக்கிய படைப்புகள்
அவர் கவிதைகளையும் எழுதியுள்ளார், பிறமொழிகளிலிருந்து பெங்காலிக்கு வெகுவாக மொழிபெயர்த்துள்ளார். விருதுகள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia