பன்னாட்டு நடன நாள்
பன்னாட்டு நடன நாள் (International Dance Day) என்பது ஒரு உலகளாவிய நடனக் கொண்டாட்டமாகும், இது யுனெசுக்கோவின் கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கிய பங்காளியான பன்னாட்டு நாடக நிறுவனத்தின் (ITI) நடனக் குழுவால் தொடக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 29 அன்று உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் நவீன பாலே நடனத்தின் தந்தை எனக் கருதப்படும் சான் சியார்ச் நோவேர் (1727-1810) என்பவரின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் மூலம் நடனத்தில் பங்கேற்பையும் கல்வியையும் ஊக்குவிக்க முயல்கின்றது. யுனெசுகோ இந்த நிகழ்வின் படைப்பாளர்களாகவும் அமைப்பாளர்களாகவும் நாடக நிறுவனத்தை முறையாக அங்கீகரித்துள்ளது.[1] வரலாறு1982 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், பன்னாட்டு நடன நாளுக்கான செய்தியை எழுத ஒரு சிறந்த நடன ஆளுமை தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது சொந்த நகரத்தில் பன்னாட்டு நாடக நிறுவனம் ஐடிஐ ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்கிறது, அதில் நடன நிகழ்ச்சிகள், கல்விப் பட்டறைகள், மனிதநேயத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள், உயரதிகாரிகள், நடனப் பிரமுகர்கள் மற்றும் அந்த ஆண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி ஆசிரியர் ஒருவரின் உரைகள் இடம்பெறுகின்றன.[2] இந்த நாள் நடனத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணரக்கூடியவர்களுக்கு ஒரு கொண்டாட்ட நாளாக அமைகிறது, அத்துடன் மக்களிடம் அதன் மதிப்பை உணர்த்தாத அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவும் செயல்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia