பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பதிப்பாளர், கணினி மென்பொருள் வல்லுநர், நூலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டுள்ள அருணன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், புதுவையில் கபிலன் பதிப்பகம் என்னும் பெயரில் நூல் வெளியீடு செய்து வருகிறார்.
புகைப்படக் கலையிலும், ஆவணப் படங்கள் தயாரிப்பதிலும் (இயக்குவதிலும்) விருப்பமுடைய இவர் புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் இளமுனைவர் பட்டமும் (M.P.hil) காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்ட மேலாய்வும் (PDF) நிறைவு செய்திருக்கிறார்.
கபிலர்பால் பெரும் ஈடுபாடு கொண்டதனால் இயற்பெயரோடு அவர் பெயரையும் இணைத்து அருணன் கபிலன் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார். சர்வதேச தமிழ் ஆய்விதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளதால் காந்தியடிகள் குறித்த தகவல்களை விக்கி தளத்துக்குக் கொண்டு தருவதில் முனைப்புக் காட்டி வருகிறார்.
காந்தியத்தோடு தமிழ் மற்றும் தமிழர் மரபு, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான தளங்களில் பதிவுகளை அளித்து வருகிறார்.
இவர்தம் பதிவுகள் நாளிதழ்கள், வார இதழ்கள், பன்னாட்டுக் கட்டுரை மலர்கள் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன. தினமணியின் நடுப்பக்கங்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இணையத்தில் இவை தொடர்புடைய பல பதிவுகளைச் செய்து வருகிறார்.
கபிலன் ஒளியகம் என்ற பெயரில் காணொளிக் காட்சிகளை யுட்யூப்பில் நிறையத் தந்திருக்கிறார். விழாக்கள், உரைகள், அரிய தமிழறிஞர்களின் நேர்காணல்கள் முதலியன அவற்றுள் குறிப்பிடத் தகுந்தனவாகும்.
இந்திய சாகித்திய அகாதெமி குழுவினரால் இளம் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தினரால் ஒரிய மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றமை.
சாகித்திய அகாதெமியின் சார்பில் இளம் கவிஞருக்கான இந்திய இலக்கியப் பயணம் மேற்கொண்டமை.
சாகித்திய அகாதெமியின் சார்பில் கல்கத்தாவில் நடத்தப் பெற்ற தாகூர் 150 விழாவில் அனைத்து இந்திய மொழி கவிஞர்களின் சந்திப்பில் தமிழகம் சார்பாகப் பங்கேற்று கவிதை வழங்கியமை.
2025 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற சர்வதேசக் கவிதைத் திருவிழாவில் UMMESHA) தமிழ்மொழியின் சார்பில் பங்கேற்றுக் கவிதை வாசித்தளித்தமை.
அண்மையில் ஆகியன குறிப்பிடத் தக்கன.
பன்னாட்டு நகரமான ஆரோவில்லிலிருந்து வெளிவரும் செய்திமடலின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் வடிவமைப்பாளராகவும் இயங்கி வருகிறார்.
அங்குள்ள இளைஞர்கள் கல்வி மையத்திலும் தமிழ் மரபு மையத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
பகுதிநேரமாகப் புகைப்படத் துறையில் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பதிவு செய்து வருகிறார். அரிய தொகுப்பு ஒன்றையும் பாதுகாத்து வருகிறார். அவற்றில் சிலவற்றை விக்கிபீடியாவுக்கும் வழங்கியிருக்கிறார்.
இவை தவிரவும் மென்பொருள் வடிவமைப்புத் துறையிலும் ஈடுபட்டுக் கலைப்பணியாற்றி வருகிறார். பதிப்பகம், ஆவணக்காப்பு, படைப்பு ஆகியவற்றில் முனைந்துள்ளார். மேலும் விவரங்கள் தேவைப்படின் இணையத்தில் இவரது பதிவுகளை அறிய அருணன் கபிலன் என கூகுளில் தேடினால் விரியும் பக்கங்களில் காண இயலும்.
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.
உங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.