பரல் கிளிஞ்சல் காளான்
பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு (Pleurotus ostreatus), எனும் பரல் கிளிஞ்சல் காளான் (pearl oyster mushroom) அல்லது மரக் கிளிஞ்சல் காளான் (tree oyster mushroom) என்பது பொதுவாக உண்ணத்தக்க காளான் ஆகும்மிது முதல் உலகப் போரில் செருமனியில் உயிர்த்தரிப்பு உணவாகப் பயிரிடப்பட்டது.[2] இன்று இது உணவுக்காக உலகம் முழுவதும் வணிகமுறையில் பயிரிடப்படுகிறது. இது இதைப் போலவே பயிரிடப்படும் பிளியூரோத்தசு எறிஞ்சி (Pleurotus eryngi) அல்லது அரசக் கிளிஞ்சல் காளானுடன் உறவுடையது. இந்தக் கிளிஞ்சல் காளான் பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு தொழில்முறையில் பூஞ்சைவழிக்காப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. கிளிஞ்சல் காளான்கள் பொதுவாக மிகவும் விரும்பி உண்ணப்படும் காட்டுவகைக் காளானாகும். என்றாலும் இவற்றை வைக்கோல் மீதும் பிற ஊடக மீதும் கூட பயிரிடலாம். இது பெஞ்சால்டிகைடு இனிப்பின் நறுமணம் செறிந்தது ( இது வாதுமைப் பான்மைகளையும் செறிவாகப் பெற்றுள்ளது).[3] பெயர்பொதுப் பெயரும் இலத்தீனப் பெயரும் இக்காளானின் பழ உடல் வடிவத்தையே குறிக்கின்றன. இலத்தீனச் சொல்லான பிளியோரத்தசு (பக்கவாட்டு) மேல்கவிப்போடு ஒப்பிடும்போது தண்டின் பக்கவாட்டு வளர்ச்சியைச் சுட்டுகின்றன; இலத்தீனச் சொல்லான ஆசுட்டிரீட்டசு என்பதும் ஆங்கிலப் பொதுப் பெயரான கிளிஞ்சல் (oyster) அல்லது கடற்சிப்பி என்பதும் மேல்கவிப்பின் இருகவை வடிவத்தைச் சுட்டுகின்றன. பலர் இக்காளானின் மணம் இருகவைக் கடற்சிப்பியின்(oyster) மணத்தை ஒத்திருப்பதால் இப்பெயர் மிகவும் பொருத்தமானதே எனப் பராட்டுகின்றனர். கிளிஞ்சல் காளான் (oyster mushroom) எனும் சொல் பிளியோரத்தசு வகையில் உள்ள பிற காளான்களுக்கும் பயன்படுகிறது. எனவே சிலவேளைகளில் பி. ஆசுட்டிரீட்டசு இனத்தை, அதன் பேரினம் சார்ந்த பிற தாவர இனங்களில் இருந்து வேறுபடுத்த, மரக் கிளிஞ்சல் காளான் (tree oyster mushroom) எனவோ.[4] அல்லது சாம்பல் கிளிஞ்சல் காளான் (grey oyster mushroom எனவோ அழைக்கப்படுகிறது[5] விவரிப்புஇந்தக் காளான் அகன்ற விசிறி வடிவம் அல்லது இருகவைச் சிப்பி வடிவத்தில் 5செமீ முதல் 25 செமீ அகல கவிப்பு அல்லது தொப்பியைக் கொண்டது; இயற்கையான வெண்ணிறத்தில் இருந்து அல்லது சாம்பல் நிறம் அல்லது அடர்பழுப்பு நிறம் வரையிலான வண்ண மாற்றங்களைக் கொண்டிருக்கும்; விளிம்பு இளநிலையில் உள்மடிந்திருக்கும்; மென்மையும் ஓரளவு மடல் அல்லது அலை வடிவமும் பெற்றிருக்கும். சதைப்பற்று செறிவாக வெண்ணிறத்தில் அமையும்; காம்பின் ஏற்பாட்டுக்கு ஏற்ப தடிப்பு மாறும். பைதன் விதைப்பை வெண்ணிறத்தில் இருந்து பனிக்குழைவு நிறம் வரை மாறும். காம்பிருந்தால் காம்பு நோக்கி இறங்கும்மப்போது காம்பு மையம் விலகி மரக்கட்டையுடன் பக்கவாட்டில் இணைந்திருக்கும். இக்காளானின் விதைத்தூள் வெண்னிறத்திலோ இலிலாக் சாம்பல் நிறத்திலோ கரும்பின்னணியில் நன்கு புலப்படும். பொதுவாக, இந்தக் காளானில் கம்பு இருக்காது; இருந்தால் குட்டையாகவும் தடிப்பாகவும் அமையும். ஓம்பலோட்டசு நிடிஃபார்மிசு (Omphalotus nidiformis) எனும் இதையொத்த காளான் ஆத்திரேலியா, யப்பான், வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் கணப்படுகின்றன, ஓம்பலோட்டசு ஒலிவாசென்சு(Omphalotus olivascens) எனும் மேற்கத்திய விளக்கேந்தி காளானும் கிளிட்டோசைபே டீல்பாட்டா (Clitocybe dealbata) எனும் தந்தப் புனற் காளானும் உருவத்தில் பரல் கிளிஞ்சல் களானைப் போலவே அமைகின்றன. Both ஓம்பலோட்டசு ஒலிவாசென்சு , கிளிட்டோசைபே டீல்பாட்டா ஆகிய இரண்டிலும் நச்சுத் தன்மை வாய்ந்த முசுக்காரைன் வேதிப்பொருள் உள்ளது. வாழிடம்![]() ![]() உணவுப் பயன்பாடுகள்![]() பிற பயன்பாடுகள்பரல் கிளிஞ்சல் காளான் பூஞ்சையிழைச் செங்கல், இருக்கை, தோல்பொருட்கள், செய்யப் பயன்படுகிறது.[சான்று தேவை] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia