பருவப் பெயர்ச்சிக் காற்று![]() பருவப்பெயர்ச்சிக் காற்று (monsoon) என்பது நிலத்திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாட்டினால் பருவந்தோறும் உருவாகும் காற்றுப்பெயர்ச்சி ஆகும். உலகின் பல பகுதிகளில் இது ஏற்பட்டாலும் அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது ஆசிய பருவப்பெயர்ச்சியே.[1] இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று (south west monsoon) என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (north east monsoon)என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன. பருவமழை ஏற்படக் காரணம்
|
Portal di Ensiklopedia Dunia