பலேரம்![]() பலேரம் (Phalerum or Phaleron ( பண்டைக் கிரேக்கம்: Φάληρον ( Phálēron ) , கிரேக்கம்: Φάληρο ( Fáliro) என்பது பண்டைய ஏதென்சின் துறைமுகம் ஆகும். இது ஏதென்சின் அக்ரோபோலிசின் 5 கி.மீ., தென்மேற்கே, சரோனிக் வளைகுடாவின் விரிகுடாவில் இருந்தது. இந்த விரிகுடா "பே ஆஃப் ஃபலேரம்" ( கிரேக்கம்: Όρμος Φαλήρου Órmos Falíru ) என்றும் அழைக்கப்படுகிறது. பலேரம் பகுதி இப்போது பலயோ பாலிரோ, கல்லிதியா, மொஸ்காடோ, நியோ பிலிரோ ஆகிய நகரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது ஏதென்ஸ் மாநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளன. கிமு 491 இலிருந்து பிரேயசின் முன்பகுதியில் மூன்று பாறை இயற்கை துறைமுகங்களை தெமிஸ்ட்டோக்ளீஸ் ஆக்குவதற்கு முன், ஏதென்சின் முக்கிய துறைமுகமாக பலேரம் இருந்தது.[1] ஆண்ட்ரோஜியசின் மரணத்திற்குப் பிறகு கிரீட்டிற்குச் சென்றபோது தீசுசு செய்ததைப் போலவே, மெனெஸ்தியஸ் தனது கடற்படையுடன் பலேரத்திலிருந்து திராய்க்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.[2] அண்மையில், தொல்லியல் ஆய்வாளர்கள் பண்டைய ஏதென்சின் முதல் துறைமுகத்தின் தடயங்கள் போல் தோன்றியதை, நகரத்தின் கடற்படை மற்றும் கப்பல் மையம் பிரேயசுக்கு மாற்றுவதற்கு முந்தைய பகுதியைக் கண்டுபிடித்துள்ளனர். நவீன கடற்கரையில் இருந்து சுமார் 350 மீ தொலைவில் உள்ள தளத்தில், மட்பாண்டங்கள், துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டிகளின் தடங்கள் மற்றும் கப்பலில் பயணிக்க காத்திருக்கும் பயணிகள் உணவை சமைத்து வைத்திருக்கும் தற்காலிக நெருப்பிடம் ஆகியவை இருந்தன. இந்தத் தலத்தில் கடல்சார் பாரம்பரியப் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வரலாற்று கப்பல்களின் தொகுப்பு போன்றவை அமைந்துள்ளன. பால்கன் போர்கள் மற்றும் முதலாம் உலகப் போரின் போது கிரேக்க கடற்படையின் கடற்படைத் தலைமைக் கப்பலாக இருந்த ஹெச்எஸ் அவெரோஃப் (இப்போது மிதக்கும் அருங்காட்சியகம்) என்ற கிரேக்க கப்பலின் நிரந்தர நங்கூரம் இதன் தெற்கு முனையில் இடப்பட்டு உள்ளது. மற்ற அருங்காட்சியகக் கப்பல்களில் கிரேகக் கடற்படை அழிப்பான் எச் விலோஸ் (டி16), பழைய கம்பிவடக் கப்பல் Thalis o Milisios (Thales of Miletos) [3] மற்றும் ஒலிம்பியாஸ், ஒரு பண்டைய டிரைரீம் எனப்புடும் மூவரித்தோணி கடற்படைக் கப்பலின் நவீன புனரமைப்பு ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்கவர்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia