பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கைபல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை (Global Assessment Report on Biodiversity and Ecosystem Services) என்பது ஐக்கிய நாடுகள் சபையினுடைய பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கை சார்ந்த மேடை அமைப்பினால் மே 2019 இல் வெளியடப்பட்ட பல்லுயிர்மத்தன்மையின் உலகளாவிய நிலை குறித்த அறிக்கை ஆகும். இந்த அறிக்கையானது, கடந்த அரை நுாற்றாண்டில் சூழலின் மீதான மனித நடவடிக்கைகளால் புவியின் பல்லுயிர்த்தன்மையானது மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருங்கேட்டை விளைவிக்கின்ற ஒரு சரிவினைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி வனங்களில் வாழக்கூடிய பாலூட்டி இன விலங்குகள் 82 விழுக்காடு அளவிற்கும், இருவாழ்விகளைப் பொறுத்தவரை 40 விழுக்காடு அளவிற்கும், மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பவளப்பாறைகளை உருவாக்கக்கூடிய பவளங்களும், மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான கடல்வாழ் பாலூட்டிகளும் மற்றும் 10 விழுக்காடு அளவிற்கு பூச்சி இன உயிரினங்களும் அழிவினைச் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி2010 ஆம் ஆண்டில் 65 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமானது அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கை சார்ந்த மேடை அமைப்பினை உருவாக்க வலியுறுத்தியது.[1][2] 2013 ஆம் ஆண்டில், இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தொடக்கநிலை கருத்தியல் வடிவமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.[2] 29 ஏப்ரலிலிருந்து 4 மே 2019 வரை, இந்த அமைப்பின் 132 பிரதிநிதிகள் பிரான்சின் பாரீசு நகரில் முழுமையான அறிக்கையைப் பெறுவதற்காக கூடியிருந்தனர். 2019 மே 6 அன்று 40 பக்க தொகுப்பறிக்கை வெளியிடப்பட்டது.[3][4] நோக்கம் மற்றும் எல்லைஉலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை என்பது கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் பல்லுயிர்த்தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களை உலகம் முழுவதும் மதிப்பிட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையானது இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியையும் இயற்கையின் மீதான அதன் விளைவுகளையும் விரிவாக விளக்கிக்காட்டுகிறது. இந்த அறிக்கையானது 50 நாடுகளைச் சார்ந்த 145 ஆய்வாளர்கள் மூன்றாண்டு காலமாக செய்த கூட்டு முயற்சியின் விளைவு ஆகும்.[5] அத்தோடு கூட 310 ஆய்வாளர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும்.[6] உண்மையில் இந்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையானது 1,700 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த அறிக்கை பூர்வகுடி மக்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் 15,000 இற்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை ஆழமாக மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் பெரும்பாலும் இயற்கை அறிவியல் பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர். மூன்றில் ஒரு பங்கு சமூக அறிவியலாளர்களும் 10 விழுக்காட்டினர் பல்துறை வல்லுநர்களாகவும் இருந்துள்ளனர்.[5] இந்த அறிக்கையானது உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையினை ஒத்ததாகும். இந்த அறிக்கையின் நோக்கமானது, பல்லுயிர்த்தன்மை தொடர்பான கொள்கைகளில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கான ஒரு அறிவியல் முறையிலான அடிப்படையாக அமைவதே ஆகும்.[7] 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மில்லேனியம் சூழலியல் மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகான பல்லுயிர்மத்தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் முதல் அறிக்கையாகும்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia