பவர் ரேஞ்சர்ஸ்

பவர் ரேஞ்சர்ஸ் (Power Rangers) என்பது சாகசத்தனம் நிறைந்த சூப்பர்ஹீரோ நெடுந்தொடராகும். இது ஜப்பானிய தொடரான சூப்பர் சென்டாய்யை தழுவி எடுக்கபடுகிறது. இது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டு, பின்னர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானது. இது பல பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனிக் கதையுடன், தொடராக வெளிவந்துள்ளன.

ஒளிபரப்பு

இந்தியாவில் முதலில் ஜெட்டிக்ஸ் என்ற தொலைக்காட்சியில் வெளியானது. மார்ச் 2009 இல் டிஸ்னி எக்ஸ்டி இல் ஒளிபரப்பப்பட்டது. தற்போது நிக்கலோடியன் இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.[1]

விவரம்

பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் பொதுவான ஒரு கதைக்களம் இருக்கும். நாயகர்களான பவர் ரேஞ்சர்கள் தீயவர்களை அழிப்பதே கதை. இவர்களுக்கு வண்ண உடைகள் இருக்கும். தங்களுக்கு தரப்பட்ட உருமாற்றியை(Morpher) பயன்படுத்தி வண்ண உடையணிந்த ரேஞ்சர்களாக மாறுவர். இவர்களுக்கு ஆயுதங்களும் சக்திகளும் இருக்கும். தீயவர்களை கூட்டாகவும், தனித் தனியாக அழிப்பர். ஒவ்வொரு தொடருக்கு ஏற்ப தனிக் கதைக்களம் அமைந்திருக்கும்.

திரைப்படங்கள்

  • மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்
  • டர்போ பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்

தொடர்கள்

மைட்டி மார்ஃபினில் தொடங்கி இன் ஸ்பேஸ் வரை வெளிவந்த ஆறு பருவங்களும் முந்தைய பருவத்தின் நேரடி தொடர்ச்சியாகவே இருந்தன. அதன் பிறகு வந்த பருவங்கள் அனைத்தும் தனித்துவமான கதையம்சத்தைக் கொண்டு இருந்தன.

பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களின் பட்டியல்,[2]

மைட்டி மார்ஃபின் ஏலியன் ரேஞ்சர்ஸ் (1995)


இதையும் காண்க

மேற்கோள்கள்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya