பவுண்டு (கால்நடைச் சிறை)![]() ![]() விலங்கு பவுண்டு (Animal pound) என்பது சாலையில்[1] அல்லது அடுத்தவர் தோட்டத்தில் அத்துமீறி வந்த கால்நடைகளை சிறைபிடிக்கும் இடமாகும். விலங்குகளை அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்படும் வரை அல்லது சிறைபிடிக்கபட்டு பராமரித்த செலவைக் கொடுக்கும் வரை இந்த தனித்துவமான தொழுவத்தில் அடைத்துவைக்கப்படும் .[2] சொற்பிறப்பியல்"பின்ஃபோல்ட்"மற்றும்"பவுண்ட்" ஆகிய சொற்கள் சாக்சன் இனமக்களிடமிருந்து உருவானவை. Pundfald மற்றும் pund ஆகிய இரண்டும் அடைத்துவைக்கும் இடத்தைக் (பட்டி) குறிப்பவையாகும். பவுண்டுக்கு பொறுப்பான ஊழியரின் பெயர் "பிண்டர்" என்பதாகும். இது சிலரின் குடும்பப்பெயராகவும் இருக்கிறது. கிராம பவுண்டு![]() ![]() கிராம பவுண்டு பெரும்பாலான இங்கிலாந்தின் நடுக்கால கிராமங்களின் அம்சமாக இருந்தது.[சான்று தேவை] மேலும் இவை ஆங்கிலேயரின் குடியேற்றப் பகுதிகளான வட அமெரிக்கா, அயர்லாந்து, இந்தியா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இது உயரமான மதில் சுவர் கொண்ட தொழுவமாகவும், பூட்டக்கூடிய கதவுகளைக் கொண்டதாகவும் இருக்கும். அத்துமீறி வந்த ஆடுகள், பன்றிகள், மாடுகள் ஆகியவற்றை உரிமையாளர்களால் உரிமை கோரப்படும் வரை அடைத்து வைத்திருப்பதே இதன் பொதுவாக பயன்பாடாகும். [மேற்கோள் தேவை] பொதுவாக தண்டத் தொகை அல்லது வரி செலுத்துவதும் வரை அவை அடைத்து வைக்கப்பட்டிருக்கும். பவுண்டு என்பது பொதுவாக 20 சதுர மீட்டர் (225 சதுர அடி) அல்லது 0.20 ஹெக்டேர் (1⁄2 ஏக்கர்) பரப்பளவுக்கு வட்டமாகவோ சதுரமாகவோ இருக்கும். கிராம பவுண்டுகளின் அளவும், வடிவமும் மாறுபடும். சில நான்கு பக்கங்கள் கொண்டு—செவ்வகம், சதுரம் அல்லது ஒழுங்கற்ற வடிவமாகவும்-மற்றவை வட்டமானவையாக இருக்கும். அளவு என்றால் அவை சில சதுர மீட்டர் (சில சதுர அடி) முதல் 0.5 எக்டேர்கள் (1.2 ஏக்கர்கள்) வரை பரப்பளவில் மாறுபடும். ஆரம்பகால பவுண்டுகள் முட்புதற்களாளான வேலிகளைக் கொண்டிருந்தன, ஆனால் பெரும்பாலானவை கல் அல்லது செங்கலில் கட்டப்பட்டவையாக இருந்தன. பவுண்டுகள் இடைக் காலத்திலிருந்து அறியப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பவுண்டு இருந்தன. இன்று எஞ்சியுள்ளவற்றில் பெரும்பாலானவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆனால் பெரும்பாலானவை இடிந்து விழுந்துவிட்டன.[3] 1930 இல் சசெக்ஸ் கவுண்டி இதழில் குறிப்பிடபட்டுள்ளது:
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia