பவேரியா
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[4]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது.[5] பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.[6] ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.[7] வரலாறுதொன்மைக்காலம்பவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[8] நிலவியல்பவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது. மொழிகள் , கிளை மொழிமூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில் பேசினர். விளையாட்டுபவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன. புகழ்பெற்ற பவேரியாக்கள்அறிவியல் அறிஞர்கள்20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் . மதத் தலைவர்கள்உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II இவற்றையும் பார்க்கசான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia