பாங்காக் மகா மாரியம்மன் கோயில்
![]() மகா மாரியம்மன் கோயில் (Sri Maha Mariamman Temple, Bangkok) என்பது தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். பொ.ஊ. 1879 ஆம் ஆண்டு, வைத்திலிங்கம் என்ற வைத்தி படையாட்சி என்பவரால் இக்கோயில் நிறுவப்பட்டது.[1][2][3] அமைவிடம்விபரங்கள்தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் தமிழ்க் கடவுளான மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பிற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. உள்ளூர்வாழ் தமிழர்களும், தாய்லாந்து மக்களும் விழாக்காலங்களின்போது வழிபட வருகிறார்கள். நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இதர தெய்வங்கள்சிவன், விஷ்ணு, கிருஷ்ணர், பிரம்மா, இலக்குமி, சரசுவதி, பிள்ளையார், தண்டாயுதபாணி, நடராசர், சிவகாமி, காளி, அனுமன், சப்தகன்னியர், நவக்கிரகம், ஐயனார், மதுரை வீரன், பெரியாச்சி, காத்தவராயன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கும் இதர தெய்வங்களாகும்.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia