பாரசீக இளவரசன் (ஒளிக்காட்சி விளையாட்டு, 2008)
பாரசீக இளவரசன் (Prince of Persia) மான்ட்ரியல் நகரின் யூபிசாஃப்ட் என்னும் நிறுவனம் உருவாக்கிய அதிரடி சாகசங்கள் நிறைந்த ஒரு ஒளிக்காட்சி விளையாட்டு (video game). இது 2008ஆம் ஆண்டு பல இணைய தளங்களிலும் வெளியானது. பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சைடர் தேடற்பொறியின் வழி மாக் எக்ஸ் இயக்க இயந்திரத்தில் ஏற்றப்பட்டது. இந்த விளையாட்டு குறிப்பாக எந்த நூற்றாண்டினை ஒட்டியது என்பது புலப்படவில்லை எனினும், இதன் பின்புலம் பண்டைய பாரசீகமாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டில், விளையாடுபவர் இளவரசன் என்னும் பாத்திரத்தைத் தாங்குகிறார். இப்பாத்திரத்தின் பெயர் இந்த விளையாட்டில் காணப்பெறுவதில்லை. இளவரசனுடன் வரும் பெண்ணின் பெயர் எலைக்கா என்பதாகும். தன் பயணப் பாதையிலிருந்து தன்னைத் திசை திருப்பிய ஒரு பெரும் புழுதிப் புயலின் காரணமாக, ஒரு மர்மதேசத்தில் சிக்கிக் கொள்கையில் இளவரசன் இப்பெண்ணைச் சந்திக்கிறான். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள், இளவரசனின் சாகசக் கரணத் திறன்களைப் பயன்படுத்தி பல்வேறு சூழல்களையும் கடந்து செல்கின்றனர். இவற்றில் சுவர்களை ஏறித் தாண்டுவது முதல், கூரையில் தவழ்ந்து செல்வது வரை அனைத்தும் அடங்கும். இந்தப் பயணம் முழுவதிலும், விளையாடுபவர்கள் சீரழிந்த பகுதிகளைச் சீரமைப்பதான தங்களது முயற்சியில் பல்வேறு எதிரிகளைச் சந்திக்கின்றனர். இந்த விளையாட்டின் கதைக்கருவும், பின்புலத் தளமும் சொராஸ்திரிய மதத்திலிருந்து பெருமளவில் பெறப்பட்டுள்ளன.[6] விளையாட்டு இயக்கமுறைமைகள்பாரசீக இளவரசன் விளையாட்டின் இயக்க முறைமைகளை பென் மேட்டஸ் பாரசீக இளவரசன் விளையாட்டின் தூண்கள் என வர்ணிக்கிறார். இவை ஒரு பாரசீக இளவரசன் தொடர் என்பதாக அமைந்துள்ளன. கரண வித்தையில் தேர்ந்த ஒரு கதாநாயகன், பாரசீகச் சூழலில் கரண வித்தை, போர், மற்றும் புதிர் விடுவித்தல் ஆகிய அனைத்திலும் முனைவதாக இது அமைந்துள்ளது.[7] பாரசீக இளவரசன் என்னும் இந்த விளையாட்டினை விளையாடுபவர் முன்னதாகவே குறிக்கப்பட்ட இடங்களுக்கு விளையாட்டினூடே பயணப்படுதே இந்த விளையாட்டின் அடிப்படை ஆகும். ஒருவர் மட்டுமே விளையாடுவதாக இது அமைந்துள்ளது. ஆட்டக்காரர்தாம் இளவரசன். ஏஐ (AI) என்னும் கணினியின் செயற்கை அறிவினால் கட்டுப்படுத்தப்படும் எலைக்கா என்னும் துணைவியும் இதில் உண்டு. இளவரசனின் கரண வித்தை சாகசத் திறன்கள், கத்தி, கையுறை மற்றும் எலைக்காவின் மாய வித்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாட்டு முழுவதும் பல்வேறு சாகசங்களைப் புரியும் வாய்ப்பை விளையாடுபவர் பெறுகிறார். பாரசீக இளவரசன் விளையாட்டு, அதை விளையாடுபவர், இந்த விளையாட்டில் எந்த இடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வாய்ப்பினை அளிக்கிறது. மேலும், இதன் கதைக்கருவை அவர் தாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்வதும் சாத்தியமே. அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து, முன்னர் சென்றிருந்த இடங்கள் மறுமுறை செல்லும்போது மேலும் சவால் நிறைந்ததாக மாறிவிடும்.[8] இருப்பினும், அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சுத்தம் செய்த பிறகு அவ்விடம் பொறிகளற்றதாகி விடும். இப்பொறிகள் எதிரியான ஆரிமனின் தீங்குணத்தின் பல்வேறு வடிவங்களாக உருவெடுக்கலாம். இவை நிலத்தை மூடும் கருப்பு வண்ண பெரும்பந்துகளாக இருக்கலாம். இவை தொட்டால் விழுங்கி விடும் தன்மையும் கொண்டிருக்கும்.[8] இவை போன்ற பொறிகளைத் தவிர்க்க விளையாடுபவர் கரண வித்தைகளைப் பயன்படுத்த வேண்டும். பல்வேறு கரண வித்தைகளும் ஆட்டக்காரரின் வசம் கிடைக்கப் பெறும். எதிரிகளை தாண்டிக் குதிக்கவோ அல்லது அவர்களை ஒரு குத்தில் காற்றில் பறக்க விடவோ இவற்றைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில், இக்கரண வித்தைகளைச் செய்யும்போது விளையாடுபவருக்கு எலைக்காவின் உதவியும் கிட்டலாம். எலைக்காவின் பாத்திரத்தின் வழியாக மேலும் பல சாகசச் செயல்களை செய்யும் வாய்ப்பும் விளையாடுபவருக்குக் கிட்டும். எலைக்காவின் மந்திர சமிக்கையை விளையாடுபவர் பெறத்தவறி விட்டால், தளத்திலிருந்து அவர்கள் விழுந்து விடுவர். சில நேரங்களில் இது இறப்பையும் உண்டாக்கலாம். பாரசீக இளவரசன் விளையாட்டில், அதை விளையாடுபவர் மரபு வழியில் "சாக" இயலாது. மாறாக, எதிரி இறுதித் தாக்குதலை நிகழ்த்துகையில் அல்லது இளவரசன் தனது மரணத்தை எதிர்நோக்குகையில் எலைக்கா அவனைக் காப்பாற்றி விடுவாள். எத்தனை முறை அவ்வாறு எலைக்கா இளவரசனைக் காப்பாள் என்பதற்கு எல்லை ஏதும் இல்லை.[9] விளையாடுபவரைக் காப்பது மட்டும் அல்லாது, எலைக்காவும் பல கரண வித்தைகளைச் செய்வாள் மற்றும் விளையாடுபவருடன் இணைந்து பல அற்புதங்களையும் நிகழ்த்துவாள். இந்த விளையாட்டை இணையத்திலிருந்து கணினியில் இறக்கிக் கொள்ளும் பின்னூட்டம் (epilogue) என்னும் பதிப்பில் மற்றொரு புதிய மாய வித்தையும் உள்ளது. இந்தப் பதிப்பில் அழிந்து பட்ட பொருட்களை மீண்டும் உருவாக்க எலைக்காவால் இயலும். விளையாடுபவருக்கான ஒரு புதிய போர் இயக்க முறைமையும் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.[10] கருச்சுருக்கம்புல அமைப்புபாரசீக இளவரசன் விளையாட்டு நடைபெறுவது ஒரு பண்டைய பாரசீக நகரில்[11] ஆகும். இதன் அமைப்பானது, பெருமளவில், சொராஸ்திரிய மதத்தினைச் சார்ந்துள்ளது.[6] இந்த விளையாட்டின் உள்ளீடாக உள்ள நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆரிமன் மற்றும் ஆர்மஜட் ஆகிய கடவுளருக்கு இடையில் போர் மூண்டது. இப்போரின் விளைவாக, ஆர்மஜடும் மற்றும் ஆஹுரா எனப்படும் அவரது இன மக்களும் ஆரிமன் மற்றும் அவரது கேடுற்ற சீடர்களை ஒரு மரத்தில் சிறையிட்டு விடுகின்றனர். பிறகு ஆர்மஜட் உலகை விட்டுப் போய்விடுகிறார். ஆரிமன் பத்திரமாகக் கட்டுண்டு கிடப்பதை உறுதி செய்து கொள்வது ஆஹூராக்களின் பணியாகிறது. ஓராயிரம் ஆண்டுகள் வரை வெற்றிகரமாகவே இப்பணி நிறைவுறுகிறது. இக்கட்டத்தில், ஆர்மஜட் மற்றும் ஆரிமன் ஆகியவை கட்டுக்கதைகள் என ஆஹூரா இனம் நம்பத்துவங்குகிறது. காரணம், இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமதை இருப்பை அறிவிக்காமல் இருந்தமையே ஆகும். விளையாட்டின் நிகழ்வுகள் துவங்குவதற்குச் சற்று முன்னதாக, ஆரிமன் மீண்டும் விடுவிக்கப்படும் நிலையில் உள்ளார்.[11] கதா பாத்திரங்கள்பாரசீக இளவரசன் விளையாட்டின் முதன்மைப் பாத்திரம் இளவரசன் ஆகும். இது பெருஞ்ச்செல்வத்தைத் தேடிச் செல்லும் பெயரற்ற ஒரு பாத்திரமாகும். இளவரசனுடன் துணை வருவது ஆஹூரா இனத்தைச் சேர்ந்த எலைக்கா. இவளது இனம் ஒளிக்கடவுளான ஆர்மஜட் தங்களுக்கு அளித்த கடமையை மறந்து, முதன்மை எதிரியான ஆரிமனை மீண்டும் விடுதலையாக்கத் தலைப்படுகிறது.[12] ஆர்மஜட் சிறையெடுத்திருந்த ஆரிமன் இருளின் அரசராவார். தான் விடுதலை பெற்றதை ஒட்டி அகிலம் முழுவதையுமே அவர் தன் கைப்பிடிக்குள் கொணர முயல்கிறார்.[13] புலம்புகிற அரசன் பாத்திரம் இதில் முதல் தீயவனாகத் தோன்றுகிறது. இவன் தனது மகள் எலைக்காவிற்கு மீண்டும் உயிரளிப்பதற்காக ஆரிமனுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறான். ஆர்மஜடை வெல்வதற்கு ஆரிமன் தேர்ந்தெடுக்கும் கேடுற்ற நால்வரும் தீயோராகவே தோன்றுகின்றனர். அவர்களும் அவனுடனேயே ஆயிரம் வருடங்கள் சிறைப்பட்டிருந்தனர். இத்தகைய கேடுற்றோரில் வேட்டைக்காரனும் ஒருவன். அவன் வேட்டையை விரும்பும் ஒரு இளவரசனாக வாழ்ந்திருந்தான். ஆனால், விரைவில் வேட்டையில் மிக்க தேர்ச்சி பெற்று விட்டான். வேட்டைக்காரன், தனது ஆன்மாவிற்கு மாற்றாக, ஆரிமனுடன் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்கிறான். இதன் வழி, வேட்டைக்காரன் முன்பு எப்போதையும் விடவும் தனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு விலங்கினை வேட்டையாட இயலும்.[14] கேடுற்ற பாத்திரங்களில் மற்றொருவன் ஒரு இரசவாதி. இவன் ஆஹூரா இனத்தில் ஒரு அறிவியலாளனாக இருந்தவன். இறவாமையை நிலை நிறுத்த முயல்கையில், இவனது உடல் நலம் சீரழிந்து விடுகிறது. தனக்கு நீண்ட வாழ்நாளை அளிக்குமாறு இந்த இரசவாதி ஆர்ஜமட்டை வேண்டுகிறான். இதற்கு ஆர்ஜமட் மறுக்கவே, நீண்ட ஆயுளுக்காக தனது ஆன்மாவையே ஆரிமனுக்குப் பணயம் வைப்பதற்கு இரசவாதி இணங்குகிறான். மூன்றாவதான கேடுற்ற பாத்திரம் ஒரு விலைமாது. ஆட்சியில் உள்ளோரைப் போற்றுகின்ற அரசியல் தந்திரங்களில் கை தேர்ந்த ஆளுமை பெற்றவள் இவள். இவள் ஒரு ஆணுடன் தொடர்புற்றிருந்தாள். ஆனால், இறுதியில் மற்றொரு பெண்ணால் தாக்கப்பட்டு தனது அழகு மற்றும் ஆளுமையை இழந்து விட்டாள். இந்த விலைமகள் மாயமுண்டாக்கும் சக்தி பெறுவதற்காக தனது ஆன்மாவை ஆரிமனிடம் பணயம் வைத்து விட்டாள்.[15] இறுதியான கேடுற்ற கதாபாத்திரம் ஒரு போர்வீரன் ஆகும். இவன் முற்றுகை இடப்பட்டிருந்த ஒரு நாட்டிற்கு அரசனாக விளங்கியவன். அமைதியை வேண்டுகிற இவன், ஆரிமனிடம் இருந்து சக்தியைப் பெற்று தனது எதிரிகளை அழிக்கிறான். இவ்வாறு அவன் தனது மக்களுக்கு அமைதியை அளிக்கிறான் போர் முடிவுற்றதும் அமைதியை விரும்பும் மக்கள் இப்போர்வீரனை நிராகரித்து விடுகின்றனர். காரணம், இவன் போர்க்கருவியாக மாறியதே.[16] கதைக்கருஒரு புழுதிப் புயலின்போது இளவரசன் பாலைவனம் ஒன்றைக் கடக்கத் துணிவதுடன் பாரசீக இளவரசன் விளையாட்டு துவங்குகிறது. தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் எலைக்காவை இளவரசன் சந்திக்கிறான். ஆரிமனையும் அவனது சீடர்களையும் சிறையிட்ட மரத்திற்கு அவளை அழைத்துச் செல்கிறான். ஆரிமானைப் பிடிக்க எலைக்கா முயல்கிறாள். ஆனால், புலம்பும் அரசன் இறுதியில் அவனை விடுவித்து விடுகிறான். இளவரசனின் பாத்திரமும் எலைக்காவும் பயணத்தைத் துவக்கி, வளமை நிலங்கள் எனப்படும் ஆர்ஜமட்டின் சக்தி வாய்ந்த இடங்களுக்குச் சென்று அவ்விடங்களின் சக்தியினை ஆரிமன் பெறுவதைத் தடுக்க முயல்கின்றனர். இவர்கள் இருவரும் அவ்வாறு அந்நிலங்களைக் களையெடுத்ததும், மரத்தினை மீண்டும் அடைகின்றனர். இங்கு எலைக்கா தனது உயிரை ஈந்து ஆரிமன் மீண்டும் மரத்தினுள் சிறைப்படுமாறு அதற்கு முத்திரையிட்டு விடுகிறாள். இளவரசன் அந்த மரத்தை வேருடன் சாய்த்து, தனது சக்தியினால் எலைக்காவிற்கு உயிரளிக்கிறான். ஆனால், இதனிடையே மரத்தில் சிறையுற்றிருந்த ஆரிமன் விடுதலையாகி விடுகிறான். உருவாக்கம்பாரசீக இளவரசன் என்னும் விளையாட்டு உருவாக்கத்தில் உள்ளது என்பதற்கான சான்று 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணையத்திற்கு ஒரு கோப்பு கள்ளத்தனமாக வெளியிடப்பட்டதுடன் தெரிய வந்தது. 2008ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் யூபிசாஃப்ட் நிறுவனம் இதை அறிவிக்காவிடினும், இந்த விளையாட்டின் கருத்தாக்கம் அந்தக் கோப்பில் கண்டறியப்பட்டு விட்டது.[17] 2008ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த விளையாட்டு வெளியாகும் என்றும் மற்றும் இதன் மையக்கரு மற்றும் விளையாட்டு முறைமைகள் ஆகியவை பற்றியும் இது தெரிவித்தது. இந்த விளையாட்டின் முன்னோட்டங்களில் ஒன்று, இந்த விளையாட்டின் பொது விதிகள் தாம் உரைத்தவாறே இருப்பதாகவும், ஆயினும் பெரும் மாற்றங்களுக்கு அவை உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தன. இம்மாற்றங்கள் விளையாட்டின் தளம், போர் மற்றும் புதிர் விடுவித்தல் ஆகியவற்றின் மீதாக இருந்தன. போர் முறைமை ஒற்றைக்கு ஒற்றை என்பதாக இருக்கும் என்றும் இவை தெரிவித்தன. காலத்தின் மணற்துகள்கள் (Sands of Time) என்னும் தொடரில் பெரும்படையுடன் மோதுவதைப் போலன்றி, பாரசீக இளவரசன் விளையாட்டின் மூலமான முவிலக்கியம் போன்றே இது அமைவதாக இது விளங்கியது. இவ்வாறு போரின் தன்மையைப் பெருமளவில் மாற்றியதன் காரணம், எதிரி பிரத்தியேகமானவன் என்றும் அவனுடன் போர் புரிவது விளையாடுபவர்களுக்கு அற்புதமான ஒரு சாகச உணர்வை அளிக்க வேண்டும் என்பதனாலுமே என்று இதன் தயாரிப்பாளர் பென் மேட்டஸ் உரைத்தார்.[7] சிகிமிட்டார் தேடற்பொறியின் மிகுந்த அளவில் மாற்றமடைந்த ஒரு பதிப்பினை பாரசீக இளவரசன் பயன்படுத்துகிறது. கொலையாளியின் நம்பிக்கை (Assassin's Creed) என்னும் விளையாட்டிலும், இத்தேடற்பொறியே பயன்பட்டது. விளையாட்டு உருவாக்குனர்கள் இப்பொறியைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம், இதன் மூலம் அவர்கள் பிரம்மாண்டமான உலகுகளை குறைந்த அளவிலான நேரோட்ட செயலாக்கத்துடன் விளையாட்டில் உருவாக்க இயலும் என்பதே.[7] 2008ஆம் ஆண்டு மே மாதம், இள்வரசன் மற்றும் எலைக்கா ஆகிய இரு பாத்திரங்களின் கருத்துச் சித்திரங்களை இரு ஒளிக்காட்சிகளில் யூபிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.[18] ஒரு ஒளிக்காட்சி இளவரசனின் தோற்றம் வரையப்படுவதைக் காட்டுகிறது; மற்றொன்று எலைக்காவின் பட நுணுக்கங்களைக் காட்டுகிறது.[19] 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேலும் ஒரு கருத்துச் சித்திரம் வெளியானது. இது முதன்மை எதிரியான வேட்டைக்காரனை வரைந்து காட்டியது.[20] யூபிசாஃப்ட்டின் முந்தைய விளையாட்டுக்களான கொலையாளியின் நம்பிக்கை போன்றவற்றைப் போலன்றி, பாரசீக இளவரசன் எண்ணியல் உரிமப் பாதுகாப்பு எதையும் கொண்டிருக்கவில்லை.[21] இந்த விளையாட்டை முதலில் யூபிசாஃப்ட் நிறுவனம் உருவாக்குகையில், செயற்கை அறிவுத் துணையுடன் செயல்படும் பாத்திரம் ஒன்றை உருவாக்குவதிலேயே முதன்மையாக ஈடுபட்டிருந்ததாக மேட்டஸ் கூறினார். "காலத்தின் மணற்துகள்கள் என்னும் விளையாட்டின் இடத்தைப் பிடிக்கப் போவது, தோழமை கொண்ட செய்ற்கை அறிவூட்டப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்ட ஒரு விளையாட்டு முறைமைதான் என்பதை முதல் நாள் துவங்கியே நாங்கள் அறிந்திருந்தோம்.." என்று மேட்டஸ் உரைத்தார். "அது எலைக்காதான் என்று நாங்கள் முதல் நாளே தீர்மானித்திருக்கவில்லை.ஒரு குழந்தை அல்லது ஒரு தந்தையைப் போன்ற ஒரு பாத்திரம் அல்லது ஒரு சகோதரன் அல்லது இவற்றைப் போன்ற ஏதாவது ஒன்று என பல்வேறு கருத்துருக்களையும் நாங்கள் ஆராய்ந்தோம்.[22] இவ்வாறு செயற்கை அறிவூட்டப்பட்ட முறைமைக்கான உத்தியின் மூலம் Prince of Persia: The Sands of Time ஆகும். ஃபரா மற்றும் இளவரசன் கதாபாத்திரம் ஆகியவற்றின் இடையிலான தொடர்பு ஒரு கதை என்னும் அளவில் மிகுந்த நன்முறையில் அமைந்ததாகவும், இதன் காரணமாக அதை மேலும் மேம்படுத்த உருவாக்கக் குழு தீர்மானித்ததாகவும் மேட்டஸ் உரைத்தார்.[22] கீழிறக்கிக் கொளவதற்கான உள்ளீடுபாரசீக இளவரசன் விளையாட்டை இணையத்திலிருந்து கீழிறக்கிக் கொள்வதற்கான உள்ளீட்டிற்கு பின்னூட்டம் எனப் பெயரிட்டுள்ளனர். ஐஜிஎன் அமைப்புடனான ஒரு நேர்காணலில் பென் மாட்டெஸ் இதை உறுதி செய்தார். இப்புதிய உள்ளீட்டில் இளவரசன் ஆராய்வதற்கான பல புதுமையான பகுதிகளும், போரிடுவதற்குப் பல புதிய எதிரிகளும், பல போர் முறைகளும், எலைக்காவின் பயன்பாட்டிற்காகவே பல புதிய வலிமைகளும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.[23] 2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 26ஆம் நாளன்று எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் பிளேஸ்டேஷன் 3 ஆகிய முனையங்களில்[24] இப்புத்திய உள்ளீட்டினை வெளியிடத் திட்டமிட்டனர். ஆயினும், 2009ஆம் ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி வரை இது தாமதமாகி விட்டது.[25] இதற்கு வர்த்தகக் காரணங்களைச் சுட்டிக் காட்டிய யூனிசாஃப்ட் நிறுவனம் இந்த விளையாட்டிற்கான கணினிப் பதிப்பாக பின்னூட்டம் உள்ளீட்டை இன்னமும் வெளியிடாது உள்ளது.[26] வரவேற்புஇந்த விளையாட்டு பெரும்பாலான விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் பிளேஸ்டேஷன் 3 ஆகிய முனையங்களில் முறையே 81 மற்றும் 85 மதிப்பெண்களும் மற்றும் பிசியில் 82 மதிப்பெண்களும் பெற்றது.[27][28][29] இந்த விளையாட்டை அதன் எளிமைக்காகவும், பார்வைக்கு மிகவும் அற்புதமாகத் தோன்றும் இதன் கரண வித்தை சாகசங்கள் மற்றும் போர் உத்திகளுக்காகவும் ஐஜிஎன் எழுத்தாளர் ஹிலாரி கோல்ட்ஸ்டீன் மிகவும் பாராட்டினார். ஆயினும், "இத்தொடரில் ஒருவர் மிகுந்த ஈடுபாடு கொண்டால் மட்டுமே இவ்விளையாட்டைப் பெரிதும் இரசிக்க இயலும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.[30] எலைக்காவையும் அவர் மிகுந்த அளவில் புகழ்ந்தார். விளையாட்டின் இரண்டாம் நிலைப் பாத்திரமான இது, விளையாட்டு முறைமையில் முக்கியப் பங்கு கொண்டு பலருக்கும் விருப்பமான வகையில் அமைந்துள்ளதே இதன் காரணமாகும்.[30] கேம்ஸ்பாட் முனைய மறுஆய்வாளர் இதைப் போன்றே கருத்தொன்றைத் தெரிவித்தார். இந்த விளையாட்டின் அற்புதமான கலை வடிவமைப்பையும் அவர் புகழ்ந்துரைத்தார்.[31] இருப்பினும், இந்த விளையாட்டு மிகவும் எளிதாகவும், நுகர்வோர்- நட்பு கொண்டு இருப்பதாகவும் பலரும் விமர்சித்துள்ளனர். இதன் தளமும், போர்ப் பகுதிகளும் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கருதுகின்றனர்.[30][32][31] இதை ஒரு "மட்டமான விளையாட்டு" என யூரோகேமர் விமர்சித்தது. இதில் "மறு செய்கைகள் மிக அதிக அளவில் இருப்பதாக" இது கூறினும், "அற்புதமான தொழில் நுட்பத்தையும், சுவாரசியமான இயக்க முறைமைகளையும்" இது இணைத்திருப்பதாகவும் அது பாராட்டியது.[32] ஒன்அப்.காம் (1UP.com) என்னும் வலைத்தளம் இந்த விளையாட்டு முறைமை, தவறிழைத்த பின்னர் மீளமை என்னும் ஒரு தன்மையினைக் கொண்டுள்ளது பற்றி விமர்சித்தது.[33] இதன் கலை வடிவ்மைப்பு மற்றும் விளையாட்டு முறைமை ஆகியவை பிற ஒளிக்காட்சி விளையாட்டுக்களுடன் பலவாறு ஒப்பு நோக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளில் கண்ணாடி விளிம்பு (Mirror's Edge), யூபிசாஃப்ட் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான "கொலையாளியின் நம்பிக்கை " ஆகியவற்றின் பிரத்தியேகமான தளங்கள் மற்றும் நேர உத்தியின் மீதான போர் அமைப்புகள் ஆகியவை உள்ளிடும்.[32][31] பெரும் அளவில் திறந்த சூழலில் நிகழும் தீவிரமான போர்களை, ஐக்கோ (Ico), பிரம்மாண்டத்தின் நிழல் [33] (Shadow of the Colossus) மற்றும் நீர்வண்ணம் (watercolor) ஆகியவற்றுடன் ஒப்பிடுகின்றனர். இதன் தோற்றம் ஒக்காமி விளையாட்டுடன் ஒப்பு நோக்கப்படுகிறது.[34] விற்பனை2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 3 என்னும் முனையத்தில் மிகுந்த அளவில் விற்பனையாகும் விளையாட்டுக்களில் பாரசீக இளவரசன் நான்காவது இடம் பெற்றிருந்தது. ஆயினும், இது பிளே ஸ்டேஷன் 3 மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஆகிய இரண்டிலுமாக 483,000 அலகுகளே விற்பனையானது.[35] பின்னர் யூபிசாஃப்ட் வெளியிட்ட விற்பனை விபரங்களின்படி 2009ஆம் ஆண்டு ஜனவரி வரையில் பாரசீக இளவரசன் 2.2 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாக அறிய வந்துள்ளது.[36] விருதுகள்2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள், 12ஆம் வருடாந்திர இடையூட்டு சாதனை விருதுகள் நிகழ்வில் (Annual Interactive Achievement Awards) பாரசீக இளவரசன் "அசைவூட்டத்தில் மிகப் பெரும் சாதனை" என்னும் விருது பெற்றது.[37] குறிப்புதவிகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia