பார்னவா
பர்னாவா (Barnava) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாகுபத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். மீரட் அருகே உள்ள சர்தானா மற்றும் பினாளிலி இடையே பர்னாவா உள்ளது. பர்னாவாவிலிருந்து 3 கி.மீ. மற்றும் மீரட்டிலிருந்து 37 கி.மீ. தொலைவில் இக்கிராமம் உள்ளது. மகாபாரதத்தில் அரக்கு மாளிகை என பர்னாவா அறியப்பட்டுள்ளது. மகாபாரதத்தின்போது வர்ணவம் என அறியப்பட்டது. பர்னாவா இன்னும் அரக்கு மாளிகை இருந்ததற்கான ஆதாரத்தைக் கொண்டிருந்ததாகப் பலர் நம்புகின்றனர். சந்திரபிரபு திகம்பேர் ஜெயின் அத்திசியா சேத்ரா எனும் புகழ்பெற்ற சைன கோயில் கோவில் பர்னாவா கிராமத்தில் அமைந்துள்ளது. புது தில்லியில் உள்ள தாமரை கோவில் போன்ற கோயில் ஒன்று பர்னாவா ஜெயின் கோவில் வளாகத்தில் உள்ளது. இதன் முதன்மை வாயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அழகிய சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது. பர்னாவா ஜெயின் கோயில்பர்னாவா ஜெயின் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது. இந்தக் கோயில் ஜைனத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரபிரபுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மல்லினாதா சிலை உள்ளது. இது சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1917ஆம் ஆண்டு இந்தக் கோயில் சீத் லால்மன் தாசால் புதுப்பிக்கப்பட்டது.[1][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia