பிசு(குளோரோயெத்தில்) ஈதர் (Bis(chloroethyl) ether) என்பது C4H8Cl2O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். இரண்டு 2-குளோரோயெத்தில் பதிலீடுகளைக் கொண்ட ஓர் ஈதராக இச்சேர்மம் கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாக இது காணப்படுகிறது. குளோரினேற்றம் அடைந்த கரைப்பானைப் போன்ற மணம் கொண்டிருக்கும். [3]
பிசு(குளோரோயெத்தில்) ஈதர் தொடர்புடைய கந்தக கடுகு S(CH2CH2Cl)2 சேர்மத்தை விட குறைவான வினைத்திறன் கொண்டதாகும்.[3]காரத்தின் முன்னிலையில், இது கேடகோலுடன் வினைபுரிந்து இருபென்சோ-18-கிரௌன்-6 சேர்மத்தை உருவாக்குகிறது:[4]
பிசு(குளோரோயெத்தில்) ஈதர் இருமல் அடக்கியான பெத்ரைலேட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பென்சைல் சயனைடு மற்றும் சோடாமைடின் இரண்டு மோலாருக்குச் சமமான பொருட்களுடன் வளையங்களை உருவாக்கும் வினையில் இது இணைக்கப்பட்டுள்ளது. வலிமையான காரத்துடன் சேற்த்து சூடாக்கும்போது இது இருவினைல் ஈதர் எனப்படும் ஒரு மயக்க மருந்தைக் கொடுக்கிறது:[5]
O(CH2CH2Cl)2 + 2 KOH → O(CH=CH2)2 + 2 KCl + 2 H2O
நச்சுத்தன்மை
பிசு(குளோரோயெத்தில்) ஈதர் சேர்மத்தின் உயிர்கொல்லும் அளவு 74 மி.கி/கி.கி ஆகும்.[3] (வாய்வழி, எலி). ஒரு சாத்தியமான புற்றுநோய் ஊக்கியாக இது கருதப்படுகிறது.[6]