பியூட்டைல் நைட்ரைட்டு
பியூட்டைல் நைட்ரைட்டு (Butyl nitrite) என்பது C4H9NO2 என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். CH3(CH2)3ONO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இது என்-பியூட்டனாலில் இருந்து தயாரிக்கப்படும் ஓர் ஆல்கைல் நைட்ரைட்டு ஆகும். இரத்தக்குழாய் விரிவாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. 1-பியூட்டைல் நைட்ரைட்டு, என்-பியூட்டைல் நைட்ரைட்டு மற்றும் நைட்ரசு அமிலம் பியூட்டைல் எசுத்தர் ஆகியவை இச்சேர்மத்தைக் குறிக்கும் ஒத்த சொற்கள் ஆகும். தயாரிப்புஎன்-பியூட்டனாலுடன் தளத்தில் தயாரிக்கப்படும் நைட்ரசு அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் பியூட்டைல் நைட்ரைட்டு உருவாகும்.[1] பயன்கள்பரவசத்தைத் தூண்டும் உள்ளிழுக்கும் மருந்தாக பியூட்டைல் நைட்ரைட்டு இரத்தக்குழாய் விரிவாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. லாசு ஏஞ்சல்சு நகரத்தில் ஒரு பட்டதாரி மாணவரான கிளிஃபோர்ட் ஆசிங்கு என்பவரால் ஆல்கைல் நைட்ரைட்டின் வேகமாக செயல்படும் ஒத்த சேர்மமாக இது உருவாக்கப்பட்டது.[2][3] ரசு, லாக்கர் ரூம் மற்றும் போல்ட் ஆகியவை இந்த உள்ளிழுக்கும் மருந்தின் வணிகப் பெயர்களில் அடங்கும். தூய்மையாக்கி, நீரிய தூபம் அல்லது அறை நறுமணமூட்டி என்ற பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் பரவச விளைவுக்காகவும் உடலுறவின் போது மென்மையாக தசைகளை தளர்த்தவும் பயன்படுகிறது.[2][3] இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia