பிராட் பிட்
வில்லியம் பிராட்லி பிட் (William Bradley Pitt பிறப்பு: திசம்பர் 18,1963) ஓர் அமெரிக்க நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு அகாதமி விருதுகள், இரண்டு பிரித்தானிய அகாதமி திரைப்பட விருதுகள், இரு கோல்டன் குளோப் விருதுகள் ,ஒரு பிரைம் டைம் எம்மி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்களில் ஒருவரான பிட், 2006 முதல் 2008 வரை ஃபோர்ப்ஸின் வருடாந்திர பிரபலங்கள் 100 பட்டியலிலும் 2007 இல் டைம் 100 பட்டியலிலும் இடம் பெற்றார். ரிட்லி சுகாட்டின் தெல்மா & லூயிசில் (1991) ஆயன் இரவுப் பயணியாக நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட் (A River Runs Through It) என்ற நாடகத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த பிட், திகில் திரைப்படமான இன்டர்வியூ வித் தி வாம்பயர் (1994) மற்றும் குற்றத் திகில் திரைப்படமான செவன் (1995) போன்ற படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்தார். இசுட்டீவன் சோடர்பர்க்கின் ஓஷன் 'ஸ் லெவன் (2001) என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. வரலாற்றுக் காவியமான திராய் (2004), காதல் குற்றத் திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் (2005), திகில் திரைப்படமான வேர்ல்டு வார் இசட் (2013) மற்றும் அதிரடித் திரைப்படமான புல்லட் ரயில் (2022) போன்ற வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்தார். ஆரம்பகால வாழ்க்கைவில்லியம் பிராட்லி பிட், திசம்பர் 18,1963 இல் ஓக்லஹோமாவின் சானியில் ஒரு மலையேறும் நிறுவனத்தின் உரிமையாளரான வில்லியம் ஆல்வின் பிட் மற்றும் பள்ளி ஆலோசகர் ஜேன் எட்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] பின்னர் இவரதுகுடும்பம், மிசோரியின் ஸ்பிரிங்ஃபீல்டுக்குக் குடிபெயர்ந்தது, அங்கு இவர் தனது இளைய உடன்பிறப்புகள் டக்ளஸ் பிட் (பி. 1966) ,ஜூலி (நீ பிட் நீல் (பி. 1969) ஆகியோருடன் வசித்து வந்தார்.[2] ஒரு பழமைவாத கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த இவர், தெற்கு பாப்டிஸ்டாக வளர்க்கப்பட்டார், பின்னர் "அஞ்ஞானத்திற்கும் நாத்திகத்திற்குமான எண்ணத்தினால் தடுமாறினார்".[3][4][5] பிட் ஸ்பிரிங்ஃபீல்டை "மார்க் ட்வைன் நாடு, ஜெஸ்ஸி ஜேம்ஸ் நாடு" என்று விவரித்துள்ளார், "நிறைய மலைகள், நிறைய ஏரிகளுடன் இருக்குமிடத்தில்" வளர்ந்துள்ளார்.[6] தொழில் வாழ்க்கைஆரம்ப காலங்களில்லாஸ் ஏஞ்சல்ஸில் பிட், நடிப்புப் பயிற்சியாளர் ராய் லண்டனிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டார்.[7][8] 1987 ஆம் ஆண்டில் நோ வே அவுட் (1987), நோ மேன்ஸ் லேண்ட் (1987), லெஸ் தின் ஜீரோ (1987) ஆகிய படங்களில் பெயர் குறிப்பிடப்படாத கதாப்பாத்திரங்களுடன் இவரது நடிப்பு வாழ்க்கை தொடங்கியது.[7][9] மே 1987 இல், இவர் என். பி. சி சோப் ஓபரா அனதர் வேர்ல்டில் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[10] அதே ஆண்டு நவம்பரில், பிட் சிபிஎஸ் சிட்காம் டிரையல் அண்ட் எரர் மற்றும் ஏபிசி சிட்காம் கிரோயிங் பெயின்ஸ் ஆகியவற்றில் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார்.[11][12][13] இவர் திசம்பர் 1987 மற்றும் பிப்ரவரி 1988 க்கு இடையில் சிபிஎஸ் முக்கியத் தொடரான டல்லாஸின் நான்கு அத்தியாயங்களில் சார்லி வேட்டின் காதலன் ராண்டியாகத் தோன்றினார்.[14] விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia